எடப்பாடியாரை முதலமைச்சராக்குவதற்கே மதுரையில் மாநாடு - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்

admk

எடப்பாடியாரை முதலமைச்சராக்குவதற்கே மதுரையில் மாநாடு - முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கே மதுரையில் மாநாடு நடத்தப்படுகிறது என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் பேசினார்.   

தூத்துக்குடி மதுரையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி நடைபெற உள்ள  வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு  செல்வது குறித்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்  முன்னாள் அமைச்சர் எஸ்பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆக.20ம் தேதி மதுரையில் அதிமுக பொன்விழா மாநாடு நடக்கிறது. அதில் கலந்து கொள்வது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி பானுபிருந்தாவன் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு  தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமை வகித்து பேசினார். 

’’மதுரையில் நடைபெறும் அதிமுக மாநாட்டிற்கு அதிக அளவில் கட்சி நிர்வாகிகள்  செல்வது குறித்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் . அம்மா காலத்தில் ஒன்றரை கோடி தொண்டர்களாக இருந்ததை தற்போது பொதுசெயலாளர் எடப்பாடியார்  2 கோடியே 47 ஆயிரம் உறுப்பினர்களாக அதிகரித்துள்ளார். உலகளவில் ஏழாவது பெரிய கட்சியாக அ. தி.மு.க.வை உருவாக்கியுள்ளது.நாம் தற்போது எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொண்டர்களின் உற்சாகத்துடன் செயல்படுவதன் காரணமாக விரைவில் விடியா திமுக அரசு வீட்டிற்கு அனுப்பப்படும். அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக இந்த மாநாடு அமையும். அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மதுரையில் நடைபெறும் அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டிற்கு குடும்பத்துடன் திரண்டு வர வேண்டும்.  எந்த பிரதிபலனையும் எதிர்பார்க்காத தொண்டர்கள் அதிமுகவில் உள்ளதால் யாராலும் அதிமுகவை அழிக்க முடியாது. 

வரும்  நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் வெல்ல வேண்டும், சட்டமன்றத் தேர்தலில் பெரும்பாலான தொகுதியை கைப்பற்றி மீண்டும் எடப்பாடியார் முதலமைச்சராக வரவேண்டும் என்ற நோக்கில் மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டு நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் அனைவரும்  வந்தாலே மாநாடு மிகப்பெரிய வெற்றி பெரும். விடியா திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப நாம் அனைவரும் ஒரே குடும்பமாக மதுரையில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும். முதியோர், நோய்வாய்பட்டவர்களை அழைத்து வரவேண்டாம். அதேபோல் உண்மையான கட்சிக்காரர்கள் மட்டும் வந்தால் போது. காசு கொடுத்து யாரையும் அழைக்க வேண்டியது இல்லை. கட்சிக்காரர்கள் மட்டும் வந்தாலே போதும்’’. என்றார்.

இந்நிகழ்வில் கழக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாவட்ட அவைத்தலைவர் வழக்கறிஞர் திருப்பாற்கடல், மாநில அமைப்புச் சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்கத் தலைவர் சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் இரா.ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வக்கீல் பிரபு, மாவட்ட துணைச் செயலாளர்கள் சந்தனம், ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, ஒன்றியச் செயலாளர்கள் காசிராஜன், விஜயகுமார், ராஜ்நாரயணன், சௌந்தரபாண்டி, பகுதி கழகச் செயலாளர்கள் முன்னாள் துணை மேயர் சேவியர், முருகன்,  ஜெய்கணேஷ், நட்டார்முத்து, தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, சார்பு அணி செயலாளர்கள் டாக்டர் ராஜசேகர், யு.எஸ்.சேகர், டேக் ராஜா, நடராஜன், பில்லாவிக்னேஷ், ஜெ.ஜெ.தனராஜ், கே.ஜே.பிரபாகர், அருண்ஜெபக்குமார், சுதர்சன்ராஜா,  

நகர செயலாளர்கள் காயல் மொளலானா, மகேந்திரன், பேரூராட்சி கழக செயலாளர்கள் ரவிச்சந்திரன், காசிராஜன், செந்தில்ராஜகுமார், துரைச்சாமிராஜா, அசோக்குமார், கிங்சிலிஸ்டார்லின், ஆறுமுகநயினார், வேதமாணிக்கம், பொதுக்குழு உறுப்பினர் அய்யாதுரை பாண்டியன், மாநகராட்சி எதிர்கட்சித் கொறடா வக்கில் மந்திர மூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சத்யாலெட்சுமணன், எம்.பெருமாள், வக்கில்கள் சுகந்தன்ஆதித்தன், ஆண்ட்ருமணி, முனியசாமி, நயினார், சிவசங்கர், ராஜேஷ்குமார், சரவணன், ரமேஷ், சென்பகராஜ், வைகுந்த், நிர்வாகிகள் உரக்கடை குனசேகரன், தட்டார்மடம் ஞானபிரகாசம், திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், மாநகராட்சி கவுன்சிலர் வெற்றிச்செல்வன், முன்னாள் நகராட்சி சேர்மன் மனோஜ், பூந்தோட்டம் மனோகரன், திருச்செந்தூர் முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் சுரேஷ்பாபு, மகாலிங்கம், ஓடை கண்ணன், காந்தி ராமசாமி, பண்டாரவிளை பாஸ்கர், பால்துரை, திருத்துவசிங், ஏரல் ரத்தினம் அமிர்தா மகேந்திரன், கே.டி.சி.பெரியசாமி, தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், பி.ஜே.சி.சுரேஷ், பூக்கடை எஸ்.என்.வேலு, எஸ்.கே.மாரியப்பன், கே.கே.பி.விஜயன், கே.டி.சி.ஆறுமுகம், அருணாசலம், பிரங்கிலின் ஜோஸ், ஆறுமுகநயினார், வட்ட செயலாளர்கள் ஜனார்தனன், வெங்கடேஷ், சொக்கலிங்கம், கொம்பையா, சுப்பிரமணிபாண்டி, மகாராஜா, சுயம்பு, சந்திரசேகர், புற்றுக்கோவில் முருகன், அருண்ஜெயகுமார், மணிவண்ணன்,  அன்டோ, நியுக்கலாஸ், ராஜன், ரகுநாதன், தூத்துக்குடி மணிகண்டன், அருண்ராஜா, அந்தோணிராஜ், நவ்சாத், ஜெயக்குமார், உலகநாதபெருமாள், எஸ்.பி.பிரபாகர், முருகேசன், ரவிந்தரன், டைமன்ட் ராஜ், பூர்ணசந்திரன், செல்வராஜ், மாடசாமி, கண்ணையா, மாரிமுத்து, யோவான், ஹார்பர் பாண்டி, மணிகனேஷ், ரெங்கன் முன்னாள் கவுன்சிலர்கள் அந்தோணியப்பா, ஈஸ்வரன், டேவிட் ஏசுவடியான்,  மற்றும் அணில்ராஜ், தங்கமதன், எ.கே.மைதின், நிலாசந்திரன், சுந்தரேஸ்வரன், பரிபூரணராஜா, ஆனந்த், சரவணவேல், கூட்டாம்புளி வேல்சாமி, சுப்புநாராயணன், மகளிர்கள் சண்முகத்தாய், இந்திரா, ராஜேஷ்வரி, நாசரேத் ஜூலியட், முத்துலெட்சமி, பானுமதி, சரோஜா யுவன் பாலா, குரூஸ்புரம் அண்டோ, சரவணன், சுப்பிரமணியன் மற்றும் பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.