தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார் நடிகர் விஜய்.!

vijai

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கினார் நடிகர் விஜய்.!

தேர்தல் வருகிறது என்றாலே அரசியல் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. அதிலும் புதிய கட்சிகள் எல்லாம் அப்போதுதான் தொடங்கப்படும். துணிந்த நடிகர்கள் கட்சி ஆரம்பித்து வெற்றியடைந்திருக்கிறார்கள். வெற்றி பெற்றவர்களில் எம்.ஜி.ஆர் முதலானவர். தோல்வி அடைந்தவர்கள் ஏராளம். இதையெல்லாம் கணக்கில் கொண்டுதான் அரசியல் களத்தில் குதிக்க ரஜினி காந்த் அஞ்சுவதாக தெரிகிறது. 

இதில், விஜய்காந்த் துணிந்து இறங்கினார். பல வெற்றிகளையும் கண்டார். ஆனால் அவருடைய போதாத காலம் அவரால் உயிருடன் இருக்க முடியவில்லை. அவர் ஆக்டிவாக இருந்திருந்தால் தமிழகத்தில் முக்கிய இடத்தில் இருந்திருப்பார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. நடிகர் விஜய் அவ்வப்போது அரசியல் டயலாக் விட்டுக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத நேரத்தில் இன்று(02.02.2024)புதிய கட்சி பெயரை அறிவித்துவிட்டார். அவருடைய கட்சி பெயர், தமிழக வெற்றிக் கழகம் என்பதாம். இதற்கான கொள்கைகள் பின்னர் அறிவிப்பார்கள் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகுதான் மக்கள் மத்தியில் விஜய் இறங்குவார் என்றும் கூறுகிறார்கள். அதாவது வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என்றே தெரிகிறது. 2026ம் ஆண்டு வரும் சட்ட மன்ற தேர்தல்தான் இவர்கள் இலக்கு என்கிறார்கள். 

விஜய் கட்சி ஆரம்பித்ததும் அதனை பல அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்று வருகின்றனர். அதேபோல் விமர்சனம் செய்தும் வருகின்றனர். அதிமுகவில் ஜெயக்குமார் விமர்சிக்கிறார், எடப்பாடி பழனிசாமி வரவேற்கிறார். திமுகவில் உதயநிதிஸ்டாலின் வரவேற்கிறார். டிகேஎஸ்.இளங்கோவன் விமர்சிக்கிறார். இப்படியாக இன்றைய அரசியல் பரபரப்பாகியுள்ளது.