ஆரோக்கியம், மனஅமைதி மற்றும் செயல்திறனை மேம்படுத்த பயிற்சி - தூத்துக்குடியில் அக்.21 முதல் ஈஷா யோகா வகுப்புகள்!

isha news

ஆரோக்கியம், மனஅமைதி மற்றும் செயல்திறனை மேம்படுத்த பயிற்சி - தூத்துக்குடியில் அக்.21 முதல் ஈஷா யோகா வகுப்புகள்!

தூத்துக்குடியில் சத்குரு தலைமையிலான ஈஷா அறக்கட்டளை சார்பில், பொதுமக்களுக்கு யோகா பயிற்சிகளை வழங்கும் வகையில் அக்டோபர் 21 முதல் 27-ம் தேதி வரை ஈஷா யோகா வகுப்புகள் நடைபெற உள்ளன. இந்தப் பயிற்சியில் 15 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பங்கேற்கலாம் என ஈஷா தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் இவ்வகுப்புகள் தினமும் காலை 6 மணி, காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என மூன்று நேரங்களில் நடத்தப்பட உள்ளன. ஒவ்வொரு வகுப்பும் சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெறும். முதல் நாளில் அறிமுக உரை இலவசமாக வழங்கப்படுவதால், யோகா பயிற்சியில் ஆர்வமுள்ள அனைவரும் இதில் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யோகா மற்றும் தியானப் பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்தைப் பேணவும், மனஅழுத்தத்தைக் கையாளவும், கவனத்திறன் மற்றும் உணர்வுநிலையை மேம்படுத்தவும் உதவக்கூடும். அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் மனஅழுத்தம், சோர்வு மற்றும் தூக்கப் பிரச்சினைகளைச் சமாளிக்க விரும்புவோருக்கு முறையான யோகா பயிற்சிகள் பயனுள்ளதாக அமையலாம். மேலும், உடல் மற்றும் மனநலத்தைப் பேணுவதற்கான வாழ்க்கைமுறைப் பயிற்சிகளில் யோகாவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ஈஷா தன்னார்வலர்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தப் பயிற்சிகள் தொடர்பான ஆய்வுகளில் மனஅழுத்தம் குறைதல், தூக்கத்தின் தரத்தில் முன்னேற்றம், மனநிலைச் சமநிலை, மகிழ்ச்சி மற்றும் செயல்திறன் அதிகரிப்பு போன்ற பலன்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்த வகுப்பில் பங்கேற்க விரும்புவோர் https://isha.co/yoga-tuticorin என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 83000 98444, 99655 48950 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

பயிற்சி நடைபெறும் இடம்: ஈஷா யோகா மையம், புதுக்கிராமம், தூத்துக்குடி.

யோகா பயிற்சியில் ஆர்வமுள்ள பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு ஈஷா தன்னார்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.