புதுச்சேரி, சென்னையை போல் தூத்துக்குடியிலும் சிக்னல் பகுதியில் பந்தல் அமைப்பு
Pavilion News
சித்திரை மாதம் வரும் அக்னி நட்சத்திர காலம் துவங்கும் முன்பிருந்தே இவ்வாண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தாங்கமுடியாமல் சிலர் உயிரும் போயிருக்கிறது. இத்தகைய வெயிலின் உக்கிரத்தில் இருந்து தன்னை காத்துக்கொள்ள பலரும் பலவிதமான பாதுகாப்பு கவசங்களை அணிந்து செல்கின்றனர். சிலர் வீட்டில் இருந்து வெளியே வரவே அஞ்சுகிற நிலையிலும், அவ்வாறு வெளியில் வந்தவர்கள் உடனே கடந்துவிட வேண்டும் என்றும் செல்கின்றனர். அப்படி நெருப்புக்கு நடுவே செல்வது போல் உணரும் நபர்கள், சிக்னலில் சில நிமிடங்கள் நின்று செல்லும் போது மயங்கி விழும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே சிக்னல் பகுதியில் வெயிலைத்தாங்கும் பந்தல் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தியது புதுச்சேரி. அதனைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் அதேபோன்று சிக்னல் பகுதியில் பந்தலிடப்பட்டு வருகிறது. தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் பகுதியில் இன்று பந்தல் அமைக்கப்பட்டது. இது பெரிதும் உதவியாக இருக்கிறது என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.