தேசிய கொடிக்கு வணக்கம் செய்துவிட்டு, ஜெய்ஹிந்த் சொன்ன நெல்லை கோவில் யானை காந்திமதி.!

Nellaiyappar kovil

தேசிய கொடிக்கு வணக்கம் செய்துவிட்டு, ஜெய்ஹிந்த் சொன்ன நெல்லை கோவில் யானை காந்திமதி.!

நாடு முழுவதும் இன்று(15.08.2024) 78வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு, தனியார் அலுவலகங்கள் மற்றும் வீடுகள் தோறும் கொடியேற்றி மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர். அதேபோல் கோயில்களிலும் விஷேச பூஜைகள் நடத்தபட்டன.

அந்த வரிசையில் நெல்லை சுவாமி நெல்லையப்பர் காந்திமதியம்மாள் திருக்கோவிலிலும் விஷேச பூஜைகள் நடத்தப்பட்டன. கோவில் முன்பாக நடப்பட்ட கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றும் விழா நடந்தது. அதற்காக அங்கு கோவில் யானை கோமதி வரவழைக்கப்பட்டிருந்தது. முதலில் யானை கோமதி மவுத் ஆர்ஹன் இசை இசைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தது. அதனைத் தொடர்ந்து கோவில் நிர்வாக அதிகாரி அய்யர்சிவமணி தேசிய கொடியை ஏற்றினார். கொடியேற்றியதும் அங்கு நின்றவர்கள் தேசிய கொடிக்கு வணக்கம் தெரிவித்ததோடு, உணர்ச்சிப்பூர்வமாக ஜெய்ஹிந்த் என்றனர். அவர்களை போலவே தேசிய கொடிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு ஜெய்ஹிந்த் என்றது கோமதி. ஜெய்ஹிந்த் என்று முழுமையாக சொல்ல முடியாது என்றாலும் அது முயற்சி செய்ததை பார்த்தவர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தனர்.