கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்போம் - விவசாயிகள், பொதுமக்கள் அறிவிப்பு!
nazareth
நாசரேத்,மார்ச்.16:கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் குரும்பூர் பகுதியை சேர்ந்த 15 கிராம மக்களும் நாடாளுமன்ற தேர்தலைபுறக்கணிப்போம் என்று தெரிவித்துள்ளனர்.
குரும்பூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி யில் மோசடி செய்யப்பட்ட நகைகள் மற்றும் வைப்பு நிதிகளையும், சிறுசேமிப்பு நிதிகளையும் வழங்கக்கோ ரியும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிக ளுக்கு முழு நிவாரணம் வழங்கக்கோரியும், விவசா யிகளின் கடன்கள் அனைத் தையும் தள்ளுபடி செய்யக் கோரியும், முன் கார் பருவ சாகுபடிக்கு அனுமதி வழங் கக்கோரியும் குரும்பூரில் உழவர்கள் மற்றும் வணிகர் கள் சார்பில் சாலை மறியல் போராட்டம் அறிவிக்கப்பட் டது.
இதனைத்தொடர்ந்து காலை 10 மணிக்கு விவசா யிகள் மற்றும் பாதிக்கப்பட் டவர்கள் குரும்பூர் ஸ்டேட் வங்கி முன் குவிந்தனர். இதனைத்தொடர்ந்து குரும் பூர்(பொ)இன்ஸ்பெக்டர் ரசி தா,சப் இன்ஸ்பெக்டர் சுப்பி ரமணியன் மற்றும் போலீ சார்சம்பவஇடத்திற்குவிரை ந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அப்போது போலீ சாருக்கும், போராட்டக்காரர் களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற் பட்டது. இதனைத் தொடர்ந்து ஏரல் தாசில்தார் கோபால், சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில், மழை வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட விவசாயிகளுக்கு முழு நிவாரணம் வழங்கு வது, விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வது, முன் கார் பருவ சாகுபடிக்கு அனுமதி வழங்குவது போன்ற கோரிக்கைகள் குறித்து வரும் 18ம் தேதிக்குள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் குரும்பூர் பகுதியை சேர்ந்த 15 கிராம மக்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றனர்.
தொடர்ந்து தமிழக உழவர் முன்னணி துணைத்தலைவர் தமிழ்மணி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கோரிக்கைகள் குறித்து தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதால் மறியல் போராட்டத்தை ஒத்து வைக்கின்றோம். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.6 ஆயிரம் அறிவித்துள்ளது. இந்த நிவாரணம் 1965ம் ஆண்டு அறிவித்த நிவாரணம். அரசு ஊழியர்களுக்கு மட்டும் சம்பளத்தை உயர்த்தும் தமிழக அரசு, விவசாயிகளின் நிவாரண தொகையை மட்டும் உயர்த்தவில்லை. இவ்வளவு பெரிய நஷ்டம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. மாநில அரசு, மத்திய அரசிடம் ரூ.32 ஆயிரம் கோடி வெள்ள நிவாரணம் கேட்டுள்ளது. அந்த பணத்தை தமிழக அரசு யாருக்கு கொடுக்கப்போகிறது. என்ன செய்யப்போகிறது என்று தெரியவில்லை.
இதுகுறித்து தமிழக விளக்கம் அளிக்க வேண்டும். எங்களது பிரச்னைகளுக்கு தமிழக அரசு செவிசாய்க்கவில்லை. வரும் 16ம் தேதி நல்ல முடிவு எட்டப்படவில்லை என்றால் குரும்பூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசுக்கு எங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக வீடுகளில் கருப்பு கொடி கட்டி நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்றார். இந்த போராட்டத்தில் குரும்பூர் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கூட்டுறவு வங்கியால் பாதிக்கப்பட்ட பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.