பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

election

பாராளுமன்ற தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது - தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2024 ஆண்டிற்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும் என்று நேற்று(15.03.2024) கூறப்பட்டு வந்தது. அதன்படி இன்று தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கபட்ட தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ்குமார், சுக்பீர்சிங் சந்து ஆகியோர் அறிவித்தனர்.  இந்தியா முழுவதும் ஏழு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 

முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் தமிழகம் இடம்பெறுகிறது. இம்மாதம் 20.03.2024ம் தேதியே வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. 27ம் தேதி வேட்பு மனு செய்ய கடைசி நாளாகும். வேட்பு மனு 28ம் தேதி பரிசீலனை செய்யப்படுகிறது. 30ம் தேதி வேட்பு மனுவை வாபஸ் வாங்குவதற்கு கடைசி நாளாகும். அடுத்த மாதம்(ஏப்ரல்) 19ம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடக்கிறது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.