நாசரேத் தூய யோவான் பேராலய கல்லறை தோட்டத்தில் சிறப்பு ஆராதனை!
Nazareth News
நாசரேத்,நவ.02:சகல ஆத்துமாக்களின் திரு நாளை முன்னிட்டு நாசரேத் தூய யோவான் பேராலய கல்லறைத் தோட்டத்தில் சிறப்பு ஆராதனை பேராலய தலைமைப் பாதிரியார் ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்றது.
கிறிஸ்தவர்கள் இறந்தவர்களை நினைத்து வழிபடும் நாள் சகல ஆத்துமாக்களின் திருநாள் என்று அழைக்கப்படுகிறது நவ. 2 ஆம் தேதி ஆண்டு தோறும் சகல ஆத்துமாக்களின் திருநாள் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை கத்தோலிக்க கிறித்தவர்கள் கல்லறைத் திருநாள் என்று அழைத்து வருகின்றனர். சகல ஆத்துமாக்களின் திருநாளை முன்னிட்டு நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் அதிகாலையில் திருவிருந்து ஆராதனையும், அருட்செய்தியும் நடைபெற்றது. மாலையில் தூய யோவான் பேராலய கல்லறைத் தோட்ட வளாகத்தில் பேராலய தலைமைப் பாதிரியார் ஹென்றி ஜீவானந்தம் தலைமையில் உதவிப் பாதிரியார் பொன் செல்வின் அசோக்குமார் முன்னிலையில் பாடகர் குழுவினர் சிறப்பு பாடல்களை பாடி சகல ஆத்துமாக்களின் திருநாளை அனுசரித்தனர்.
ஆரம்ப ஜெபத்தை உதவி பாதிரியார் பொன் செல்வின் அசோக்குமார் ஏறெடுத்தார். பின்னர் சிறப்பு அருட்செய்தி வழங்கினார். நிறைவு ஜெபத்தை பேராலய தலைமை பாதிரியார் ஹென்றி ஜீவானந்தம் ஏறெடுத்தார்.முடிவில் ஆசி கூறினார். இந்நிகழ்வில் சபை ஊழியர்கள் ஜெபராஜ், ஜெசு, சேகர பொருளாளர் எபி, முன்னாள் சேகர பொருளாளர் மர்காஷிஸ் தேவதாஸ், சேகர கமிட்டி உறுப்பினர்கள் சாம்சன், வாஷிங்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.