ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பள்ளி, தருமபுரம் ஆதின மடத்திற்கு விற்பனை? -நடவடிக்கைக்கு கோரிக்கை

Srivaikundam news

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் பள்ளி, தருமபுரம் ஆதின மடத்திற்கு விற்பனை? -நடவடிக்கைக்கு கோரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இருக்கிறது. இதனை சிலர் சட்டத்திற்கு விரோதமாக தருமபுரம் ஆதின மடத்திற்கு விற்பனை செய்திருப்பதாகவும், இது குறித்து புகார் செய்தால் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம்சாட்டு ஸ்ரீவைகுண்டம் முன்னாள் பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.பால்துரை, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு தூத்துக்குடி மாவட்ட எஸ்.பியிடம் மனு கொடுத்துள்ளார்.

அந்த மனுவில், திருவைகுண்டம் ஸ்ரீகுமர குருபர சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுமார் 100 ஆண்டுகள் பாரம்பரியமிக்க மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியை சுந்தர் அய்யர் என்பவர்தான் தொடங்கினார். இதன் முதல் நிர்வாக கமிட்டி செயலாளர் கோபால அய்யர். அதற்கு பிறகு பல நிர்வாக கமிட்டி செயலாளர் நல்லபடியாக பள்ளியை நிர்வகித்து சென்றார்கள். தற்சமயம் நிர்வாக கமிட்டி செயலாளர் என்று சொல்லிக் கொண்டு திருவைகுண்டத்தை சேர்ந்த எஸ்.சண்முகநாதன் என்பவர் இந்த பள்ளிக்கு எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லாத மயிலாடுத்துறை மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தருமபுரம் ஆதின மடத்திற்கு தானம் என்ற பெயரில் சட்டத்திற்கு விரோதமாக விற்றுவிட்டார்கள். இதை நான் கண்டித்து மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் மறைமுகமாக எனக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். சட்டவிரோதமாக விற்றவர் மீதும், வாங்கியவர் மீதும், சட்ட விரோதமான இதற்கு உடந்தையாக இருந்த நபர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுத்து, பள்ளியையும், என்னையும் காப்பாற்றுமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வரும் 30ம் தேதி ரவுடிகள் துணையோடு கூட்டம் நடத்துவதை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.