தூத்துக்குடி மாவட்டத்தில் 27 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்
Thoothukudi collector
தூத்துக்குடி மாவட்டத்தில் 27 துணை வட்டாட்சியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலகில் துணை வட்டாட்சியர் நிலையில் பணியாற்றிவரும் 27 பேருக்கு பணியிட மாறுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி காவல்துறை பயிற்சி முடிந்த நிலையில், மாவட்ட கலெக்டர் அலுவலக முன்னாள் தலைமை உதவியாளர் சுரேஷ், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலைஞர் மகளிர் திட்ட தனித்துணை வட்டாட்சியராகவும். மாவட்ட கலெக்டர் அலுவலக முன்னாள் தலைமை உதவியாளர் மரியவியாகுல ஜெயா, தூத்துக்குடி நெடுஞ்சாலைப் பணிகள் நிலம் எடுப்பு துணை வட்டாட்சியராகவும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக முன்னாள் கண்காணிப்பாளர் பொன்செல்வி, திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலக துணை வட்டாட்சியராகவும், கோவில்பட்டி சென்னை - கன்னியாகுமரி தொழில்தட திட்ட தனிவட்டாட்சியர் நில எடுப்பு அலுவலக முன்னாள் துணை வட்டாட்சியர் செல்வலட்சுமி, எட்டயபுரம் வட்டாட்சியர் அலுவலக தனித்துணை வட்டாட்சியராகவும், சாத்தான்குளம் முன்னாள் வட்ட வழங்கல் அலுவலர் பிரபு, சாத்தான்குளம் வட்ட வழங்கல் அலுவலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், மாவட்ட கலெக்டர் அலுவலக துணை வட்டாட்சியராகவும் (வரவேற்பு-1), திருச்செந்தூர் மண்டல துணை வட்டாட்சியர் தங்கமாரி, ஏரல் வட்ட வழங்கல் அலுவலராகவும், எட்டயபுரம் மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், தூத்துக்குடி ஆயத்தீர்வை உதவி இயக்குநர் அலுவலக கண்காணிப்பாளராகவும், சாத்தான்குளம் மண்டல துணை வட்டாட்சியர் தாஹீர் அகமது, ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலராகவும், கோவில்பட்டி மண்டல துணை வட்டாட்சியர் செந்தில் முருகன், மாவட்ட கலெக்டர் அலுவலக தலைமை உதவியாளராகவும், கோவில்பட்டி மண்டல துணை வட்டாட்சியர் மைக்கேல் சார்லஸ் ராஜா, சாத்தான்குளம் துணை வட்டாட்சியராகவும், மாநகராட்சி தனித்துணை வட்டாட்சியர் ராமச்சந்திரன், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலக கண்காணிப்பாளராகவும், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலக கண்காணிப்பளர் பொன்னம்மாள், கோவில்பட்டி தனித்துணை வட்டாட்சியராகவும், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக கலைஞர் மகளிர் திட்ட தனித்துணை வட்டாட்சியர் வெள்ளத்துரை, கயத்தார் வட்ட வழங்கல் அலுவலராகவும், மாவட்ட கலெக்டர் அலுவக தலைமை உதவியாளர் ரேவதி, கயத்தார் துணை வட்டாட்சியராகவும், மாவட்ட கலெக்டர் அலுவலக துணை வட்டாட்சியர் ரமேஷ், தூத்துக்குடி மண்டல துணை வட்டாட்சியராகவும், ஸ்ரீவைகுண்டம் தனித்துணை வட்டாட்சியர் அய்யனார், சாத்தான்குளம் மண்ட துணை வட்டாட்சியராகும், கயத்தார் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், கயத்தார் மண்டல துணை வட்டாட்சியராகவும், ஏரல் வட்ட வழங்கல் அலுவலர் சிவகுமார், திருச்செந்தூர் மண்டல துணை வட்டாட்சியராகவும், திருச்செந்தூர் கலைஞர் மகளிர் திட்ட தனித்துணை வட்டாட்சியர் செல்வசெல்சுமி ஓட்டப்பிடாரம் மண்டல துணை வட்டாட்சியராகவும், கோவில்பட்டி தனித்துணை வட்டாட்சியர் வெள்ளத்துரை, கோவில்பட்டி மண்டல துணை வட்டாட்சியராகவும், கயத்தார் மண்டல துணை வட்டாட்சியர் ஜெயலட்சுமி, எட்டயபுரம் மண்டல துணை வட்டாட்சியராகவும், சாத்தான்குளம் வட்ட வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி, ஏரல் தலைமையிடத்து துணை ஆட்சியராகவும், கயத்தார் தனித்துணை வட்டாட்சியர் திரவியம், கோவில்பட்டி தலைமையிடத்து துணை வட்டாட்சியராகவும், எட்டயபுரம் தனித்துணை வட்டாட்சியர் வி.சண்முகவேல், கயத்தார் தனித்துணை வட்டாட்சியராகவும், ஸ்ரீவைகுண்டம் வட்ட வழங்கல் அலுவலர் ரகுபதி ராஜா, தூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலக தனித்துணை வட்டாட்சியராகவும், நெடுஞ்சாலைப் பணிகள் துணை வட்டாட்சியர் சுல்தான் சலாகுதீன், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலக தனித்துணை வட்டாட்சியராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் உத்தரவில் தெரிவித்துள்ளார்.