தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தலா 1 பவுன் தங்க மோதிரம் வழங்கிய மேயர் - அண்ணாச்சி போலவே அவரது மகனும் அசத்தல்

N.P.Jegan

தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தலா 1 பவுன் தங்க மோதிரம் வழங்கிய மேயர் - அண்ணாச்சி போலவே அவரது மகனும் அசத்தல்

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி எள் என்றால் எண்ணெயாக நிற்பவர் அவருடைய முரட்டு பக்தன் அண்ணாச்சி என்.பெரியசாமி. கட்சியை கட்டுக் கோப்பாக வைத்திருக்க, மேலும் வளர்க்க கட்சியினரின் நலன் மிகவும் முக்கியம் என்பதை நன்கு உணர்ந்தவர் கலைஞர். அவர் வழியில்தான் அண்ணாச்சி பெரியசாமியும் செயல்பட்டார். கலைஞர் போலவே தற்போதைய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினும், மக்களுக்கு சேவை செய்ய திமுகவினரின் மனது முதலில் குளிர வேண்டும் என்று நினைத்து செயல்படுகிறார். 

கடந்த காலம் போல் அல்லாமல் கொஞ்சம் கடுமையான நிர்வாகத்தை நடத்துவதால், கட்சியினர் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ந்து அவ்வப்போது அவர்களுக்கு உதவும் உத்தரவுகளை அவர் நிர்வாகிகளுக்கு பிறப்பித்து வருகிறார். அந்த வகையில் சமீபகால பண்டிகைகளின் போது கட்சியினர் சந்தோஷம் கொள்ளும் அளவிற்கு அவர்கள் முக்கிய நிர்வாகிகளால் மகிழ்விக்கப்படுகிறார்கள். அதுமட்டுமில்லாமல் வெள்ளப்பாதிப்பு உள்ளிட்ட இடர்கால நிவாரணங்களை மக்களுக்கு வழங்குவதில் முனைப்பு காட்டும் நோக்கில் திமுகவினர் ஊக்கிவிக்கப்படுகின்றனர். களத்தில் நிற்கும் அனைவருக்கும் நிவாரணங்களோடு, வெகுமதியும் தருகின்றனர்.  

அந்த வகையில்தான் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, அவரது மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு தலா ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கியிருக்கிறார். சமீபத்தில் வெள்ளத்தில் சிக்கி தவித்த மக்களுக்கு உத்வேகத்தோடு உதவிய அந்த கவுன்சிலர்களுக்கு உதவ வேண்டும், அவர்கள் கவுரவிக்கப்பட வேண்டும் என்று நினைத்த மேயர் ஜெகன் பெரியசாமி, பொங்கல் பண்டியையொட்டி 50க்கும் மேற்பட்ட கவுன்சிலர்களுக்கு தலா ஒரு பவுன் தங்க மோதிரங்களை வழங்கி வாழ்த்துக்களை  பெற்றுள்ளார். 

கடந்த 2008ம் ஆண்டு நகராட்சியை மாநகராட்சியாக அந்தஸ்தை உயர்த்தி அதனை திறந்து வைத்த கையினால் முதல் மேயர் கஸ்தூரி தங்கத்திற்கு 111 பவுன் தங்க ஜெயினை அணிவித்தார் முதல்வர் கலைஞர் கருணாநிதி. அதற்கான ஏற்பாட்டினை அண்ணாச்சி பெரியசாமி செய்திருந்தார். அதுமட்டுமில்லாமல் அப்போதிருந்த 51 கவுன்சிலர்களுக்கு தலா ஒரு பவுன் தங்க மோதிரம் வழங்கினார் அண்ணாச்சி. அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அண்ணாச்சி என்.பெரியசாமியை போலவே அவரது மகனும், தற்போதைய மேயருமான ஜெகன் பெரியசாமியும் உழைக்கும் கவுன்சிலர்களுக்கு  ஊக்கம் கொடுக்கும் வகையில் தங்க மோதிரங்களை வழங்கி கட்சிதலைமையிடம் சபாஷ் பெற்றிருக்கிறார்.