தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன்

Minister Geethajeevan

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமை ஆய்வு செய்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாமை அமைச்சர் கீதாஜீவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மக்களுடன் முதல்வர் திட்டத்தின்படி, மக்கள் பயன் பெறும் வகையில் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, கூட்டுறவுத்துறை, மகளிர் மேம்பாட்டு கழகம், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மின்சாரத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, சிறு, குறு, நடுத்தர தொழில்துறை, காவல்துறை, மருத்துவதுறை உள்பட அத்தியாவசிய துறைகளின் அதிகாரிகள், ஒரே இடத்தில் கலந்து கொள்ளும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் கடந்த 19ம் தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற்றது.

இந்நிலையில், இறுதி நாளான இன்று தூத்துக்குடி போல்பேட்டை தங்கம்மாள் பள்ளியில் நடைபெற்ற முகாமை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம் பொதுமக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு விரைவாக தீர்வு காண வேண்டும் என்றார்.

ஆய்வின்போது, கவுன்சிலர்கள் ரெங்கசாமி, காந்திமணி, சுப்புலட்சுமி கணேசன், மாநகராட்சி உதவி ஆணையர் தனசிங், உதவி செயற்பொறியாளர் பிரின்ஸ் ராஜேந்திரன், சுகாதார ஆய்வாளர் ஹரிகணேஷ், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், அறங்காவலர் மந்திரமூர்த்தி, மாநகர அவைத்தலைவர் ஏசுதாஸ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.