கவர்னர் ஆர்.என்.ரவியியின் அதிரடியால் தமிழக பொது பாடத்திட்டம் ரத்து?

Pothu kalvi thittam

கவர்னர் ஆர்.என்.ரவியியின் அதிரடியால் தமிழக பொது பாடத்திட்டம் ரத்து?

பொது பாடத்திட்ட விவகாரத்தில், பல்கலைகளுக்கு கவர்னர் எழுதிய கடிதத்தால், தமிழக அரசின் முடிவுக்கு,பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதில், பல்கலைகழகங்களுக்கு புதிய நம்பிக்கை கிடைத்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு பல்கலை.,கல் மற்றும் அதன் இணைப்பு அந்தஸ்து பெற்ற,கலை அறிவியல் கல்லூரிகளில், தன்னாட்சி அந்தஸ்தின்படி, தனித்தனி பாடத்திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்தநிலையில் தமிழக உயர் கல்வி மன்றம், கலை அறிவியல் படிப்புகளுக்கு, திடீரென ஒரு பொது பாடத்திட்டத்தை தயாரித்து, அதை அனைத்த் பல்கலைகளும், கல்லூரிகளும் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டது.

இதற்கு, கல்லூரி ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு,சென்னை பல்கலை பேராசிரியர் பேரவை, மக்கள் கல்வி கூட்டியக்கம், பல்கலை ஆசிரியர் சங்கம் ஆகிய தரப்பிலும், முன்னாள் துணை வேந்தர் பால குருசாமி மற்றும் தன்னாட்சி கல்லூரிகைன் முதல்வர்கள், தாளாளர்கள் தரப்பிலும், எதிர்ப்புகள் எழுந்தன.

இது குறித்து, நமது நாளிதழில் விரிவான செய்திகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தன்னாட்சி கல்லூரிகளின் கூட்டத்திலும் கடும் எதிர்ப்பு எழுந்ததால், தன்னாட்சி கல்லூரிகளுக்கு மட்டும்,பொது பாடத்திட்டம் கட்டாயமில்லை என, தமிழக அரசு அறிவித்தது. ஆனால், பல்கலைகளுக்கு பொதுபாடத்திட்டம் பின்பற்றுவதில் விலக்கு அளிக்கவில்லை. இந்த விவகாரம், உயர் கல்வி துறையில் விஸ்வரூபம் எடுத்த நிலையில், பல்கலைகளின் வேந்தர் என்ற முறையில், கவர்னர் ரவியிடம் பொது பாடத்திட்ட பிரச்னையை, கல்வியாளர்கள், கல்வியாலர்கள் மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள் எடுத்து சென்றனர். 

அவர், இது குறித்து கவர்னர் அலுவலக அதிகாரிகள் மற்றும் சட்ட வல்லுனர்களிடம் விவாதித்தார். இந்த விவகாரத்தில், மத்திய அரசின் உயர் கல்வி கண்காணிப்பு அமைப்பான,யு.ஜி.சியின் நிலைப்பாட்டைக் கேட்டு,யு.ஜி.சி தலைவர் ஜெகதீஷ்குமாருக்கு, கவர்னர் ரவி கடிதம் எழுதினார். இதையடுத்து கவர்னர் ரவியின் கடிதத்துக்கு யுஜிசி தலைவர் அளித்துள்ள பதில் : 

யு.ஜி.சி விதிகளின்படி, அகாடமிக் கவுன்சில் மற்றும் எக்ஸ்கியூட்டிவ் கவுன்சில் வழியாக பாடத்திட்டத்தை உருவாக்க, பல்கலைகள் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பல்கலையும்,தன்னாட்சி கல்வி நிறுவனமும் தாங்களே விரிவான பாடத்திட்டத்தை உருவாக்க, புதிய கல்வி கொள்கை வழியாகவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பல்கலைகள் மற்றும்   தன்னாட்சி கல்லூரிகள், தாங்களே பாடத்திட்டம் உருவாக்கி பின்பற்றுவதில், எந்த குழப்பமும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

இவற்றையெல்லாம் குறிப்பிட்டு, பல்கலைகள்,தனியார் கல்லூரிகள், தனியார் கல்லூரி நிர்வாகிகள் சங்கம், தமிழக உயர் கல்விதுறை ஆகியவற்றுக்கு, கவர்னர் ரவி அனுப்பியுள்ள கடிதத்தில் உயர் கல்வி என்பது மத்திய அரசின் பொதுப்பட்டியலில் உள்ளதாலும், பொது பாடத்திட்டத்தை, தன்னாட்சி கல்லூரிகளோ,பல்கலைகளோ பின்பற்ற வேண்டியதில்லை எனக் கூறியுள்ளார். 

இதன் காரணமாக, பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில், தனிழக அரசுக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பல்கலைகளின் வேந்தர் என்ற முறையில் கவர்னர் இதில் தலையிட்டுள்ளதால், பொதுபாடத்திட்டம் முழுமையாக ரத்தாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

(பொது பாடத்திட்டம், எதற்காக அவசரமாக உருவாக்கப்பட்டது. அதற்கான தேவை என்ன,உடனே அமல்படுத்துமாறு கட்டாயப்படுத்துவது ஏன் என்பதற்கான காரணங்களை, தமிழ அரசு விரிவாக விளக்கவில்லை. பல்கலை மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தை மேம்பாட்டுக்கு உதவும், கல்லூரிகள் மற்றும் பல்கலைகளுக்கு உறுதுணையாக செயல்படவும்,தமிழக உயர் கல்வி மன்ற விதிகளில் அதிகாரம் தரப்பட்டுள்ளது. அதற்கு மாறாக, பொதுப்பாடத்திட்டத்தை, உயர் கல்வி மன்றம் உருவாக்கியது தவறு. 

பொதுபாடத்திட்டம் கொண்டு வருவது தொடர்பாக, தமிழக உயர் கல்வித்துறை எந்த அரசாணையும், பிறப்பிக்கவில்லை.பல்கலைகளின் கமிட்டிகள் மற்றும் யு.ஜி.சி போன்ற அமைப்புகளின் கருத்துகளையும் பெறவில்லை. இதுபோன்ற விஷயங்களே பின்னடைவுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.)