இன்னும் 116 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்

M.K.Stalin

இன்னும் 116 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் - முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல்

தி.மு.க., சார்பில் கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். இன்னும் 116 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்படவேண்டும் என நேற்று சிவகங்கையில் நடைபெற்ற  அரசு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புக் கொண்டுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சிவகங்கையில் நடைபெற்ற அரசுவிழாவில், முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து ,புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி. பயனாளிகளுக்கு அரசு நலத்திட்டஉதவிகளை வழங்கி பேசினார்.

இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-  நம்முடைய அரசு, துல்லியமாகவும், துரிதமாகவும் செயல்பட்டுவருகிறது. அதனால்தான்,ஒட்டு மொத்த தமிழ்நாட்டிற்கும்,ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என்னென்ன செய்திருக்கிறோம் என்று ஒவ்வொரு மேடையிலும் நான் புள்ளிவிபரத்துடன் சொல்லிவருகிறேன்.

இதையெல்லாம் இன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என்ன செய்வது?அதனால் வாய்க்கு வந்தபடியெல்லாம் பொத்தாம் பொதுவாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எரிச்சலில் புலம்பியிருக்கிறார். நான் கேட்க விரும்புவது அவரால் இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமா? திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு வெட்டிப்பேச்சு பேசுவது போன்று, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா..

மக்களிடம் உண்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டிய கடமையும்,பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. காரணம் நாங்கள் அரசாங்கத்தில் இருக்கிறோம். அரசை வழிநடத்திக் கொணடிருக்கிறோம்.அதனால் உங்களிடம் புள்ளி விவரத்தோடு சொல்ல விரும்புகிறேன். 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு தி.மு.க  சார்பில் கொடுத்த 505 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறோம். இன்னும்116 வாக்குறுதிகள்தான் நிறைவேற்றப்பட வேண்டும். அரசில் மொத்தம் 34 துறைகள் இருக்கிறது. ஒவ்வொரு துறைக்கும் இரண்டு மூன்று திட்டங்களை நிறைவேற்றவேண்டிய அளவில்தான் மீதம் இருக்கிறது. நாங்கள் அதை ஏற்றுக்கொள்கிறோம். ஒப்புக்கொள்கிறோம். இல்லை என்று மறுக்கவில்லை. 

இதை தெரிந்தும் தெரியாதது போன்று, எதிர்க்கட்சித்தலைவர் பேசுகிறார். பாவம் அவர், மற்றொரு கட்சித்தலைவர் அறிக்கையை அப்படியே காப்பிபேஸ்ட் செய்துவெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். பிரபல பத்திரிக்கைகள் தங்களுடைய இணைய பக்கத்தில் அவருடைய காப்பியடித்த அறிக்ககையை பதிவிட்டார்கள். இதுதான் அவர் சொல்லும் குற்றச்சாட்டுகள் எப்படிப்பட்டவை என்பதற்கான சான்று. இப்போது வாய்ச்சவடால் விடும் எதிர்க்கட்சித்தலைவர் 2011 மற்றும் 2016ம் ஆண்டு சட்டமன்றத்தேர்தல்களின்போது, அதிமுக., சார்பில் வெளியிட்ட தேர்தல் அறிக்கைகளை எடுத்து ஒவ்வொரு வாக்குறுதிக்கு கீழும், அதை நிறைவேற்றிய  நாள், அதற்கான அரசாணை எண், அதனால் பயனடைந்தவர்கள் விவரம் என்று பட்டியலிட்டு புத்தகமாக வெளியிடுவதற்கு அவர்கள் தயாராக இருக்கிறார்களா.,

முழுவதுமாக பத்தாண்டுகள் ஆட்சி செய்து, தமிழ்நாட்டை அதல பாதளத்தில் தள்ளியதை மக்கள் மறந்து இருப்பார்கள் என்று நினைத்து, புது புதுக்கதைகளோடு வருகிறார் எதிர்க்கட்சித்தலைவர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை கடலோர சாலைத்திட்டம் என்று சொன்னார்களே, நிறைவேற்றறினார்களா? மகளிருக்கு 50 விழுக்காடு மானியத்தில் ஸ்கூட்டர் வழங்கப்படும் என்று சொன்னார்களே, யாருக்காவது கொடுத்திருக்கிறார்களா., அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் செல்போன் வழங்கப்படும் என்று சொன்னார்களே, கொடுத்தார்களா.,

தென் தமிழகத்தில் ’ஏரோ பார்க்’ வந்துவிட்டதா., பத்துஆடை அலங்காரப் பூங்காக்கள் என்று அறிவித்தார்களே எங்கு இருக்கிறது.. 58 வயதுக்கு மேலானவர்களுக்கு இலவச பஸ்பாஸ் என்று சொன்னார்களே..யாராவது அப்படி பயணம்செய்திருக்கிறீர்களா.. பொதுஇடங்களில். இலவச ’வைபை’ என்று சொன்னார்களே எந்தஇடத்திலாவது அந்த வசதியை ஏறபடுத்தியிருக்கிறார்களா..

இப்படி வெற்றுவாக்குறுதிகளை கொடுத்து, தமிழநாட்டை தரைமட்டத்துக்கு அனுப்பியவர்கள் பொய்களாலும் அவதூறுகளாகவும் நம்மை வீழ்த்தமுடியுமா என்று பார்க்கிறார்கள்.  உண்மையில் இன்றைக்கு பேசும் எதிர்க்கட்சித் தலைவருடைய ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு என்ன நிலைமையில் இருந்தது?

2011தி.மு.க ஆட்சிக்காலத்தில் உபரி வருவாய் மாநிலமாக இருந்த தமிழ்நாட்டை. 2013 ம் ஆண்டு முதல் பற்றாக்குறை மாநிலமாக மாற்றியதுதான். அதிமுக., அரசு2017-19  ஆண்டுகளில் இந்தியாவிலேயே அதிகளவு வருவாய்பற்றாக்குறை கொண்ட மாநிலமாக தமிழ்நாட்டை தத்தளிக்க விட்டார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான நெருக்கடியிலியருந்து, தமிழ் நாட்டை மீட்டிருக்கிறோம்.அதிமுக. ஆட்சிக்காலத்தில் அவர்கள் முதுகு வளைந்து சேவை செய்த அவர்களுக்கு  இணக்கமான ஒன்றிய அரசு இருந்தது.அப்போதும் எதையும் கேட்டு பெறவில்லை.  பதவிக்காக மட்டும் டில்லிக்கு சென்றார்.
ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் அதே ஒன்றிய அரசு. நம்மை தமிழ்நாடு அரசாகப்பார்க்காமல் கொள்கை  எதிரிகளாக பார்த்து திட்டங்களை முடக்கினார்கள். மத்திய அரசின் அந்த ஒரவஞ்சனைகளையும் மீறிதான் தமிழ்நாட்டைமுன்னேற்றிக் கொண்டு இருக்கிறோம். மத்திய அரசின் திட்டங்களுக்கும். மாநில அரசின் நிதியை செலவு செய்து திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்.

முந்தைய அ.தி.மு.க ஆட்சியின் கையாலாகாத நிர்வாகச் சீர்கேடுகள் ஒருபுறம், மத்திய பா.ஜ.. அரசின் பாராமுகம் மறுபுறம். மத்தியஅரசு தமிழ்நாட்டை எப்படி வஞ்சிக்கிறது என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இரண்டு நாட்களுக்கு முன்பு விளக்கமாக பேட்டி கொடுத்திருக்கிறார். ஏற்கனவே சட்டமன்றத்திலும் பேசியிருக்கிறார்.எதிர்க்கட்சித்தலைவர் அது எதையும் காதிலேயே வாங்குவதில்லை. அது எதையும் படிப்பதும்இல்லை. மிகவும் சாதாரணமாக தமிழ்நாடு திவால் ஆகி விட்டது. என்று சொல்கிறார் என்றால் தமிழ்நாடு திவால் ஆக வேண்டும் என்பது தான் அவருடைய எண்ணமா? என்று கேட்கத் தோன்றும்.

எதிர்க்கட்சித் தலைவரே எங்களுக்கு தெரியும்.எந்த செலவு செய்தால் மக்களுக்கு நன்மை என்பது. உங்கள் நிர்வாகத்தை மக்கள் ஞாபக மறதியால்  மறந்திருப்பார்கள் என்று தப்புக்கணக்கு போடாதீர்கள். நீங்கள் போடும் எல்லா கணக்கும் தப்பு கணக்கு தான். மக்கள் எங்களுடைய செயல் பாடுகளையும் மக்கள் நலத்திட்டங்களையும் கணக்கு போட்டு முதல் மதிப்பெண் கொடுக்கிறார்கள் எங்களுக்கு அது போதும்.

மற்றொன்றும் சொல்கிறார்… தி.மு.க ஆட்சிக்கு 13 அமாவாசைகள் தான் இருக்கிறது என்று சொல்லிக் கொண்டு காலண்டரை கிழித்துக் கொண்டு இருக்கிறார்.அது தான் இப்போது அவருடைய வேலை. அவர் இருட்டில் உட்கார்ந்து அமாவாசையை எண்ணிக் கொண்டு இருக்கிறார். இருக்கட்டும் பரவாயில்லை. நாம் மக்களுக்கான நன்மைகளை எண்ணி. திட்டங்களை செயல்படுத்துவோம். மக்களுடைய மகிழ்ச்சிகளை மட்டும் எண்ணிப் பார்ப்போம்.

நேற்று நான் சிவகங்கைக்கு வந்ததிலிருந்து மக்கள்கொடுத்த வரவேற்பையும், அவர்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியையும் பார்க்கும்போது. உதயசூரியன் ஒளியில்  தொடர்ந்து தமிழ் நாட்டை தி.மு.க. தான் என்றும் ஆளும். உங்களுக்காக. உங்களுடைய பிரச்னைகளுக்காக. உங்களுடைய நன்மைகளுக்காக. ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் தி.மு.க., தான் என்றும் ஆளும்., உங்களுக்காக, உங்களுடைய பிரச்னைகளுக்காக, உங்களுடைய நன்மைகளுக்காக ஒவ்வொருவருடைய வீட்டிற்கும் தி,மு,க., அரசின் சாதனைகள் சென்றுக் கொண்டிருக்கிறது.

அது தொடரும் தொடரும் என்பதை மீணடும் மீண்டும் எடுத்துச் சொல்லி. தி.மு.க., வை பொருத்தவரையில் என்றைக்கும் மக்களுடன் இருந்து பணியாற்றக்கூடிய இயக்கம்தான் என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவுபடுத்தி மக்களுக்காக என்றும் உழைப்போம், உழைப்போம் என்று சொல்லி விடைபெறுகிறேன் என்று பேசி முடித்தார்.

ஆக, இதன் மூலம் திமுக அரசு இன்னும் 116 வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டியது உள்ளது என்பது தெரிகிறது.