செந்தியம்பலம் பகுதியில் புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி - ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை

Thoothukidi collector

செந்தியம்பலம் பகுதியில் புதிய மேல் நிலை நீர்த்தேக்க தொட்டி - ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை

செந்தியம்பலம் பகுதியில் உள்ள பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு தூத்துக்குடி மத்திய ஒன்றிய திமுக துணைச்செயலாளர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கைவிடுத்துள்ளார்.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

தூத்துக்குடி மாவட்டம் சேர்வைக்காரன்மடம் ஊராட்சி செந்தியம்பலம் கிராமத்தில் 1968 இல் கட்டப்பட்ட  மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த தண்ணீர் தொட்டியை அகற்றிவிட்டு புதிய தண்ணீர் தொட்டி அமைக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து ஒட்டப்பிடாரம் எம்.எல்.ஏ சண்முகையாவிடமும் முறையிடப்பட்டது. மேலும் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 8 ம் தேதி முதலமைச்சரின் தனிபிரிவிற்கும் கோரிக்கை மனு அளித்தேன்.

இந்நிலையில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், சேர்வைக்காரன்மடம் ஊராட்சியில், செந்தியம்பலம் கிராமத்தில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியை அகற்றிட, சம்மந்தப்பட்ட நீர் தேக்க தொட்டி கள ஆய்வு செய்யப்பட்டதாகவும், அதனை இடிப்பதற்கு அனுமதி வழங்க கோரி பிரேரணை அனுப்பட்டடுள்ளதாகவும், அனுமதி பெறப்ப்பட்டவுடன் பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அகற்றப்பட்டு, புதிய தொட்டி கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தூத்துக்குடி வட்டாரவளர்ச்சிஅலுவலர் (வ.ஊ)மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மாவட்ட கலெக்டர் செந்தியம்பலம் பகுதியில் உள்ள பழமையான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை அகற்றிவிட்டு,   1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஏஞ்சலின் ஜெனிட்டா தெரிவித்துள்ளார்.