''ஓரமா போகாதே உடை முள் குத்தும்'' - தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் அவசியமாக உள்ள எச்சரிக்கை

Thoothukudi - Thiruchendur

''ஓரமா போகாதே உடை முள் குத்தும்'' - தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் அவசியமாக உள்ள எச்சரிக்கை

பிரசித்திபெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில், குலசை முத்தாரம்மன் கோவில்களுக்கு செல்லும் பிரதான சாலை என்பதோடு, கிழக்கு கடற்கரை சாலை, தூத்துக்குடி - கன்னியாகுமரி சாலை என்று மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் தூத்துக்குடி - திருச்செந்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உடை மரங்கள் சூழ்ந்திருப்பதை பார்க்கும் பொதுமக்கள், தேசிய நெடுஞ்சாலை நிர்வாகத்தின் அலட்சியம் என்று குற்றம் சாட்டி வருகின்றனர். 

தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்றுவரும் இந்த சாலையில் பல இடங்கள் மேடு,பள்ளமாக உடைந்துகிடப்பது வேறு கதை. இப்போது இந்த சாலையின் இருபுறமும் உடை மரங்கள் வளர்ந்து சாலையை மறைக்கும் வகையில் சூழ்ந்திருப்பது வாகன ஓட்டிகளை மிகவும் துன்புறுத்தி வருகிறது. குறிப்பாக முள்ளக்காடு முதல் கோவங்காடு விலக்கு வரை இந்த நிலை அதிகமாக உள்ளது.  இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் போகும் அளவிற்கு உடை மரங்களின் கிளைகள் சாலையை மறைத்துக் கொண்டிருக்கிறது. இந்த சாலையில் சாமான்ய மக்கள் முதல் அமைச்சர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட விஐபிக்கள் வரை சென்று வருகின்றனர். ஆனாலும் நீண்ட நாட்களாக இந்த உடை மரங்கள் அப்படியேதான் இருக்கிறது. தற்போது சிறிதளவில் நடந்து வரும் விபத்துக்கள், பெரிய அளவில் நடந்துவிடுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், நடைபயணம் மேற்கொள்ளும் பக்தர்கள் கேட்டு கொள்கின்றனர்.  

இதுவரை அரசு நிர்வாகம் இதனை கவனிக்காமல் இருந்தாலும், இதையே தகவலாக வைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுக்கின்றனர்.