அனைவருக்கும் எனது அன்பின் கிறிஸ்மஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் - சகோ.மோகன் சி லாசரஸ்
Nalumavadi News

அனைவருக்கும் எனது அன்பின் கிறிஸ்மஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று நாலுமாவடி இயேசு விடுக்கிக்கிறார் ஊழியநிறுவனர் சகோ.மோகன் சி லாசரஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
அதில், உலகமெங்கும் மக்களுடைய வாழ்க்கையில் இருள் சூழ்ந்துள்ளது.போர் மற்றும் இயற்கை பேரழிவுகளால் ஒரு பக்கம் பெரும் சேதம் ஏற்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் பஞ்சத்தாலும், நோய்களாலும், பொருளாதார பாதிப்பாலும் மக்கள் கடும் வேதனைக்குள்ளாகி வருகின்றனர். இதனால் நாம் இந்தி உலகில் நிம்மதியாக வாழ்வோமா...என்ற அச்சம் நம்மிடையே ஏற்பட்டுள்ளது. இந்த இருளை போக்கத்தான் இந்த உலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயேசு கிறிஸ்து அவதரித்தார். அவர் இந்த உலகத்தில் இருளை அகற்ற வெளிச்சமாக உதித்தார்.
இன்று இயேசுவாகிய வெளிச்சம் உதித்த நாள். இந்த நாளைத்தான் கிறிஸ்துமஸ் என்று அழைக்கிறோம். இந்த கிறிஸ்துமஸ் பண்டிகையைத்தான் உலகமே வெளிச்சத்தின் பண்டியாக கொண்டாடுகிறது. இருளில் தவித்து கொண்டிருப்பவர்கள் கவலைப்பட வேண்டாம். இதோ இந்த இயேசு கிறிஸ்து வெளிச்சமாக அவதரித்துவிட்டார். கிறிஸ்துமஸ் என்பது நமக்குநாமே மகிழ்வித்து கொள்வது அல்ல. மற்ற மக்களை மகிழ்ச்சியாக்கி பார்ப்பதுதான். ஏழைகளுக்கு உதவுவதே உண்மையான கிறிஸ்துமஸ். இந்த காலங்களில் ஒவ்வொரு கிறிஸ்துவ குடும்பமும் ஏழை குடும்பத்தை கண்டுபிடித்து அவர்களுக்கு உதவி செய்யுங்கள். இந்த வருட கிறிஸ்துமஸ் பண்டிகையை வித்தியாசமாக கொண்டாடுங்கள்.
இயேசுவுக்கு கொடுக்கப்பட்ட ஒவ்வொரு பெயரும் அவருடைய ஆசிர்வாதங்களையும் வெளிப்படுத்துகிறது. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாற உங்களை மகிழ்விக்க அவர் உங்களுக்கு அதியங்களை செய்வார். அனைவருக்கும் எனது அன்பின் கிறிஸ்மஸ், புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் என்று கூறப்பட்டுள்ளது.