மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இனிமேல் ஆங்காங்கே ரோட்டில் பார்க்க முடியாது

samuganalan news

மனநலம் பாதிக்கப்பட்டவர்களை இனிமேல் ஆங்காங்கே ரோட்டில் பார்க்க முடியாது

தூத்துக்குடி மாவட்டம், டூவிபுரத்தில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் (23.12.2024), குமரி முனையில் வானுயர்ந்து நிற்கும் அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவியர்கள் வரைந்த திருக்குறள் புகைப்படக் கண்காட்சி மற்றும் மகிழ்வகம் மகளிர் நம்பிக்கையின் உறைவிடத்தினை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இதில் கனிமொழி எம்.பி பேசும்போது, மனநிலை பாதிக்கப்பட்டவர்கள், பல இடங்களில் நடந்து கொண்டிருப்பதை, உட்கார்ந்து கொண்டிருப்பதையும், அலைந்து கொண்டிருப்பதையும் நாம் பார்க்கிறோம்.  ஒரு நிமிடம் அவர்களுக்காக வருத்தப்படுவோம் ஆனால் கடந்து சென்று விடுவோம். அதையே அவர்களுக்கு உதவி செய்வது, அவர்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று தனது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருக்கக்கூடிய நிறுவனம் தான் பேனியன். மேலும், நாடு முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு மாநிலங்களில் மெண்டல் ஹெல்த் பாலிசி உருவாக்குவதற்கு காரணமாக இருக்கக்கூடியதும் பேனியன் நிறுவனம் தான்.

ஒரு காலகட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கொண்டு போய் மெண்டல் அசைலம் என்று  சொல்லக்கூடிய ஒரு இடத்தில், ஒரு அறையில், அடைத்து வைத்து அதுதான் அவர்களின் வாழ்க்கைக்கான தீர்வு. அங்கேயே விட்டுவிட்டு அவர்கள் மடியக்கூடிய ஒரு சோகத்தை எல்லாம் பார்த்து உள்ளோம்.

ஒருவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கிறார் என்ற  ஒரே காரணத்திற்காக அவருடைய அத்தனை உரிமைகளையும் நாம் எடுத்துக் கொள்வதற்கு, நமக்கு எந்த தகுதியும் கிடையாது. யாருக்கும் அந்த உரிமையும் கிடையாது. அவர்களுக்கு  சிகிச்சை அளித்து அவர்களை குணப்படுத்தி அவர்களது உரிமைகளை அவர்களுக்கு திரும்பி தரக்கூடிய ஒரு காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம்.

இது அனைத்திற்கும் ஒரு மிகப்பெரிய அளவிலே பங்காற்றி கொண்டு இருக்கும். இப்படிபட்ட நிறுவனமான பேனியன். தூத்துக்குடியில் இந்த மகிழ்வகத்தை உருவாக்குவதற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நம்முடைய  முதலமைச்சர் தொடர்ந்து இப்படிபட்ட பல புதிய திட்டங்களை வாக்கு வங்கிக்காக இல்லாமல், தலைவர் கலைஞர் எப்படி சமூகத்திற்கான திட்டங்களை தொலை நோக்கோடு தந்தார்களோ, அது மாற்றுத்திறனாளியாக இருக்கட்டும் அல்லது மூன்றாம் பாலினம் என்று சொல்லக்கூடிய திருநங்கைகளாக இருக்கட்டும் இவர்களை எல்லாம் அரவனைத்து ஒரு ஆட்சி நடத்தி காட்டினாரே அதேபோல்  அவருடைய  வழியில் நம்முடைய முதலமைச்சர் மீண்டும் இல்லம் திரும்பக்கூடிய இப்படிபட்ட ஒரு மிகப்பெரிய திட்டத்தை துவக்கி இன்று பல்வேறு நிறுவனங்கள் அதை தன் கையில் எடுத்து மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்க கூடிய வாய்ப்பை உருவாக்கி தந்திருக்கிறார்கள். 

இந்த மகிழ்வகம் இங்கு உருவாகுவதற்கு எல்லா உதவிகளையும் செய்து தந்திருக்ககூடிய நம்முடைய அமைச்சராக இருக்கட்டும், நம்முடைய மாவட்ட ஆட்சியர், மாநகர மேயர், மாநகராட்சி ஆணையாளர், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகியோருக்கும் எனது நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், மேயர் பெ.ஜெகன், மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆர்.ஐஸ்வர்யா, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சிவக்குமார், பான்யன் நிறுவனம் உதவி இயக்குநர் கீர்த்தனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.