இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

Nalumavadi News

இயேசு விடுவிக்கிறார் ஊழியம் சார்பில் மாரத்தான் போட்டி - வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ரெடீமர்ஸ் கிளப் சார்பில் மாரத்தான்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் பங்குபெற்ற நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு தற்போது பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான மாரத்தானில்  10 கிலோமீட்டர் பந்தய தூரத்திற்கான போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் 65 பேர் பங்கு பெற்றனர். 

முதல் 25 இடங்களை பெறும் போட்டியாளர்களுக்கு சிறப்பு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. பங்குபெற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. 10 கிலோமீட்டர் ஓட்ட போட்டியில் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியின்  பதினோராம் வகுப்பு மாணவர் வெங்கடேஷ் 8வது இடத்தையும், ஆறாம் வகுப்பு மாணவர் யோகேஸ்வரன் 10ம் இடத்தையும், ஒன்பதாம் வகுப்பு மாணவர் சுப்பிரமணியன் 17வது இடத்தையும், ஒன்பதாம் வகுப்பு மாணவர் லூக்கா 18வது இடத்தையும்  பிடித்து சிறப்பு பரிசுகளைப் பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும், பங்குபெற்ற மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும், பரிசுகளையும் பள்ளி மாணவர் கூடுகையில் நடைபெற்ற விழாவில் தலைமையாசிரியர் குணசீலராஜ் வழங்கி சிறப்பித்தார். 

நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் சார்லஸ் திரவியம், உடற்கல்வி இயக்குனர் பெலின் பாஸ்கர், தேசிய மாணவர் படை அலுவலர் சுஜித் செல்வசுந்தர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ், பிற மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் கலந்து கொண்டனர். மரத்தான் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பங்கு பெற்ற மாணவர்களையும், பள்ளியின் தாளாளர் சுதாகர், ஆசிரியர்கள், ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பாராட்டினர்.