எம்.ஜி.ஆரின் 37வது ஆண்டு நினைவு தினம் - அஞ்சலி செலுத்த தயாராகும் அதிமுகவினர்
M.G.R.News
தமிழக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக தலைவருமான எம்.ஜி.ஆரின் 37ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாளை(24.12.2024) எம்.ஜி.ஆரின் சிலை மற்றும் உருவபடங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவுக்கிணங்க, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட செயலாளர்கள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. அதேபோல் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இது குறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் விடுத்துள்ள அறிக்கையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் எனது தலைமையில் தூத்துக்குடி டூவிபுரம் 7வது தெருவில் உள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தின் முன்பு அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பின்னர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகம் சென்று அங்கு அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்படுகிறது.
இந்நிகழ்வில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட, ஒன்றிய, நகர, மாநகரபகுதி, பேரூராட்சி, வட்ட, கழக நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், புரட்சித் தலைவரின் இரத்ததின் ரத்தங்கள், மகளிர்கள் பெருந்திரளனா அளவில் கலந்துகொண்டு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். மேலும், நிர்வாகிகள் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து இடங்களிலும் அவரவர் பகுதிகளில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவர்களின் திருவுருவ படத்தினை அலங்கரித்து வழிபாடு செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.