இளங்கோவன் மறைவிற்கு டெல்லியில் இருந்து வந்தவர்கள் மிக குறைவு - குடும்பத்தினர் வருத்தம்

EVKS

இளங்கோவன் மறைவிற்கு டெல்லியில் இருந்து வந்தவர்கள் மிக குறைவு - குடும்பத்தினர் வருத்தம்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான ஈவிகேஎஸ்.இளங்கோவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல்நலக்கோளாறு காரணமாக இறந்துபோனார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்கிற கட்சி பதவியை தாண்டி எம்.எல்.ஏ, எம்.பி மட்டுமல்லாது மத்திய அமைச்சராக கூட இருந்தவர் இளங்கோவன். அவர் இறந்த போது டெல்லியில் இருந்து நிறையபேர் வருவார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் வட்டாரமும், அவரது குடும்பத்தினரும் நினைத்திருந்தனராம். ஆனால் இவர்கள் எதிர்பார்த்த அளவில் டெல்லி விஐபிக்கள் வரவில்லையாம். 

அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் திறமையின்மைதான் காரணம் என அவரது குடும்பத்தினர் வருத்தத்தில் இருக்கும் நிலையில், இந்த தகவல் மீடியாக்கள் பக்கம் போய்விட கூடாது என்பதற்காக ஒட்டுமொத்த கதர் நிர்வாகமே கவனமாக இருந்து வருகிறது என்கிறார்கள்.