ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை, நாம்தான் வழங்கி வருகிறோம் - கனிமொழி எம்.பி தொடர் குற்றசாட்டு

D.M.K

ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் வழங்கவில்லை, நாம்தான் வழங்கி வருகிறோம் - கனிமொழி எம்.பி தொடர் குற்றசாட்டு

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மகளிர் அணி மகளிர் தொண்டரணி ஆலோசணை கூட்டம் அபிராமி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தார். மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ராமலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்றார். 

திமுக துணைபொதுச்செயலாளரும், தூத்துக்குடி எம்.பியுமான கனிமொழி பெண்களுக்கு சேலைகள் வழங்கினார். அப்போது அவர், ’’இந்த அரங்கம் நிறைந்த கூட்டத்தை பார்க்கும் போது தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கூட்டணி வெற்றி உறுதியாகிவிட்டது. திராவிட மாடல் ஆட்சி மகளிர்கான ஆட்சிதான். ஏனென்றால் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்ற நமது தலைவர் ஸ்டாலின், பெண்கள் அரசு பேருந்துகளில் இலவச பயணம், மேற்கொள்ளலாம் என்று முதல்  கையெழுத்திட்டார். யாரையும் எதிர்பார்க்காமல் இந்த பொறுப்பை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டார். பெண்கள் ஆண்களை எதிர்பார்க்காமல் தனது தாய் தந்தையரை பார்க்க மட்டுமின்றி அவசர நிமித்தமாக மற்ற பணிகளுக்கு செல்வதற்கு இந்த இலவச பேருந்து பயணம் அமைகிறது. 

இதன் மூலம் ஒவ்வொரு பெண்களுக்கும் மாதம் 888ரூபாய் மிச்சப்படுகிறது. வீட்டில் முடங்கி கிடப்பவர்களுக்கு எழுச்சியுட்டும் பணியை முதலமைச்சர் செய்து கொடுத்துள்ளார். கலைஞர் ஆட்சியில் 10ம்வகுப்புவரைபெண்கள் படிக்க வேண்டும் என்று கூறியது மட்டுமின்றி திருமண உதவி தொகை வழங்கினார். தற்போது தமிழக முதல்வர் அதனை யும் தாண்டி எல்லா பெண்களும் கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் ஆயிரம் கல்வி உதவித்தொகை வழங்குகிறார். உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் 1000வீதம் 1 கோடியே 15லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் எதிர்பாராத மழை வௌ்ளத்தால் பொதுமக்கள் விவசாயிகள் மீனவர்கள் வியாபாரிகள் என பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டனர். அதற்கு நாம் நிதி கோரினோம். பிரதமர் இதுவரை எதுவும் வழங்காமல் இருந்து வருகிறார்.

இதற்கிடையில் இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் குழு வந்து பார்வையிட்டு வந்து சென்றுள்ளனர். எதுவும் வழங்காத நிலையில் அனைவருக்கும் நானிருக்கிறேன் என்ற உறுதியை வழங்கி தமிழக முதலமைச்சர் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு நம்முடைய மாவட்டத்திற்கு நேரில் வருகிறார். தமிழக்திலிருந்து பல்வேறு வகையில் ஒன்றிய அரசு எடுத்துச்செல்லும் வரி வருவாயில் கூட தமிழகத்திற்கு குறைவாகவும் உத்திரபிரதேசத்திற்கு அதிகமாகவும் வழங்கி பிஜேபி அரசு நம்மை வஞ்சித்து வருகிறது. 

இப்படி பட்ட அரசிற்கு நாம் பாடம் புகட்டியாக வேண்டும். வரும் நாடாளுமன்ற தோ்தலில் சந்தர்ப்பமாக பயன்படுத்திக்கொண்டு ஓட்டு கேட்க வரும் பிஜேபியினரிடம் எங்கள் பணம் எங்கே என்ற கேள்வியை கேட்பது மட்டுமின்றி யார் வரவேண்டும், யார் வரக்கூடாது என்பதில் நாம் தெளிவாக இருக்கும் வகையில் கலைஞர் ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளை திருமண நிகழ்வு உள்ளிட்ட கலந்து கொள்ளும் அனைத்து நிகழ்வுகளிலும் நீங்கள் அரசியல் பிரச்சனை பேசி திண்ணை பிரச்சாரத்தின் மூலம் திமுகவிற்கு வாக்கு சேகரிக்க வேண்டும். ஒன்றிய அரசு பல்வேறு சட்டங்களை கொண்டு வந்தபோது அவர்களோடு இருந்து எல்லாவற்றையும் ஆதரவளித்த எடப்பாடி இன்று எதிர்ப்பதாக கூறிவருகிறார். இவர்களால் நாட்டிற்கு நன்மையில்லை. ஒன்றிய அரசு பல நுழைவு தேர்வு என்று கொண்டு வருவதன் மூலம் எதிர்காலத்தில் நம்முடைய குழந்தைகள் மருத்துவம் மற்றும் கல்வி துறையில் சாதனை படைக்க முடியாத நிலைக்கு அழைத்து செல்கின்றன. இதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் ஜாதி மதத்தின் பெயரால் பிளவு படுத்துவதை அனுமதிக்க முடியாது. மணிப்பூரில் இன்று வரை அமைதி திரும்பவில்லை. எல்லோருக்கும் நன்மை அளிக்கும் வகையில் இந்தியா கூட்டணி இந்திய திருநாட்டில் வெல்ல வேண்டும் என்று பேசினார். 

அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், 1921வரை உங்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்படவில்லை. அதன்பின்பு நீதிகட்சி ஆட்சியின்போது தான் எல்லோருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. 1929ல் சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும். கல்வியில் முன்னேற வேண்டும் என்று பெரியார் தீர்மானம் போட்டார். 1989ல் கலைஞர் ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை என்ற சட்டத்தை இயற்றியதின் மூலம் இன்று அதன் பலனை பலரும் அனுபவித்து வருகின்றீர்கள். தமிழ்நாட்ட பின்பற்றி மற்ற மாநிலங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பின்னர் ஒன்றிய அரசும் சட்டத்தை இயற்றியது. கலைஞர் ஆட்சியின் போது அரசுத்துறை மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் 10 பேர் பணியாற்றினால் அதில் 3 பெண்கள் இருக்க வேண்டும் என்ற திட்டத்தை அமுல்படுத்தினார். அதே போல் பெண்களுக்கு 33 சதவீத இடஓதுக்கீடு கொண்டு வந்ததின் மூலம் தான் நான் அரசியலுக்கு வந்து இன்று பெரிய பொறுப்பில் அமர்ந்து பணியாற்றுகிறேன். இப்போது அது 50 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் பொதுஇடங்களில் பெண்கள் அமர முடியாது கருத்துக்களை கூற முடியாது என்ற இருந்த நிலையெல்லாம மாறி இன்று எல்லோரும் சமமாக அமர்ந்து இருக்கின்றோம். அதற்கு காரணம் திராவிட மாடல் ஆட்சிதான் வரும் நாடளுமன்ற தோ்தலில் ஒன்றிய அரசு வேலைவாய்ப்பு வழங்காததையும் கேஸ்விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு அதனால் விலைவாசி உயர்வு அனைத்தையும் எடுத்துச்சொல்ல வேண்டும் தமிழகத்தில் கர்ப்பினி பெண்ணுக்கு குழந்தை பெற்று இரண்டு வயது வரை அனைத்து வகையாக ஊட்டச்சத்துக்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது. ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்த அரசு உத்தரவாதம் வழங்கி தமிழகத்தில் குழந்தை திருமணத்தை முற்றிலுமாக தடுத்துள்ளது. மழை வௌ்ளகாலத்தின் போது கனிமொழி எம்.பி ஆற்றிய பணிகளை எல்லோரும் அறிவீர்கள் வரும் காலத்திலும் அவர் தான் நமக்கு வேட்பாளர் கடந்த முறை பெற்ற வெற்றியைவிட கூடுதலான வாக்கு பெற்று வெற்றி பெற அனைவரும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

கூட்டத்தில் துணை மேயர் ஜெனிட்டா, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கஸ்தூரி, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் கலைச்செல்வி, வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், மாவட்ட துணைச்செயலாளா்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், மாநில மீனவரணி துணை செயலாளர் புளோரன்ஸ், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர்கள் கோட்டுராஜா, கஸ்தூரிதங்கம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்டஅணி துணை அமைப்பாளர்கள் அருணாதேவி, பிரபு, பார்வதி, கோகுல்நாத், மாநகர அணி அமைப்பாளர்கள் ஜீவன்ஜேக்கப், அருண்சுந்தர், முருகஇசக்கி, கிறிஸ்டோபர் விஜயராஜ், துணை அமைப்பாளர்கள் செல்வின், சீதாலட்சுமி, பிரவின்குமார், சங்கரநாராயணன், ரவி, பெல்லா, சங்கரவடிவு, இந்திரா, கவுன்சிலர்கள் ரெக்ஸின், ஜான்சிராணி, வைதேகி, விஜயலட்சுமி, பவாணி, சுதா, சரவணக்குமார், பொன்னப்பன், ஜாக்குலின் ஜெயா, பேபி ஏஞ்சலின், பாப்பாத்தி, நாகேஸ்வரி, அரசு வழக்கறிஞர் மாலாதேவி, மகளிர் அணி சத்யா, ரேவதி, பகுதி இளைஞர் அணி அமைப்பாளா் சூர்யா, மற்றும் கருணா, மணி அல்பட், உள்பட பலர் கலந்து கொண்டனர். மாநகர மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஜெயசீலி நன்றி கூறினார்.