கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் செய்வது யார்? திமுகவா?..பாஜகவா..?

kachchateevu

கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் செய்வது யார்? திமுகவா?..பாஜகவா..?


கச்சத்தீவு விவகாரத்தில் அரசியல் செய்வது யார்? திமுகவா?..பாஜகவா..? 

எந்த ஒரு நாட்டின் கடல் எல்லைகளும் சரி சமமாக பிரிக்கப்பட வேண்டும். அதுதான் சர்வதேச எல்லை வரையறை விதியாகும். அந்த வகையில் இந்தியா - இலங்கை இடையிலான கடல் எல்லை பிரிக்கப்பட்டிருக்கிறது. 

ஆனாலும் கச்சத்தீவு இலங்கை பக்கம் சென்றுவிட்டதையும், அதன் மூலம் இந்திய மீனவர்கள் பாதிக்கபடுவதையும் வைத்து, கடல் எல்லை முறையாக பிரிக்கப்பட வில்லையென்றும், இது குறித்து இந்திய நாடாளுமன்றம் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றும் கூறிவருகிறார்கள்.  

ஒரு காலத்தில் இலங்கையோடு அமெரிக்கா நெருக்கம் காட்டி வந்தபோது இலங்கையை இந்தியா கைவிடும் சூழ்நிலை வந்தது. அதை தவிர்க்க பயன்படுத்திய இந்திய பிரதமர் இந்திராகாந்தி, இது போன்ற விட்டுக் கொடுக்கும் அரசியலை செய்ததாக அப்போதைய அரசியல் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். இருநாட்டு கடல் எல்லை பிரிக்கப்படும்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி பல்வேறு தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார் என்று கூறுவதோடு, அது குறித்த கூட்டத்தை அதிமுக புறக்கணித்தது என்று அதிமுக மீது குற்றம் சொல்கிறார் தற்போதைய தமிழக முதல்வர். கச்சத்தீவை தாரை வார்த்தது திமுக என்கிற அவ பெயர் அக்கட்சியினரை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. முறையாக பிரிக்கப்படவில்லை. வழி முறைகளை முறையாக கடைபிடிக்கவில்லை என்கிற குற்றசாட்டு பிரிக்கப்பட்ட நீண்ட காலமாக கூறப்பட்டு வருகிறது. அப்படி கூறப்படும்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியின் தலைதான் உருளுகிறது.  

கச்சத்தீவை தாரை வார்த்த திமுக என்று அவ்வப்போது அதிமுக கூறுவது உண்டு. இப்போது பாஜகவும் அப்படி கூற ஆரம்பித்திருக்கிறது. இது திமுகவை வெகுவாக பாதித்திருக்கிறது. கூட்டணி கட்சியான காங்கிரசை நேரடியாக குற்றம் சொல்லமுடியாமல் அதிமுகவையும், பாஜகவை சாடி வருகின்றனர் திமுகவினர். தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதை நினைவு படுத்தியிருக்கிறார். தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம் பிரதமர் மோடி செய்யவில்லை என்று பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டியிருக்கிறார். கச்சத்தீவு ஒப்பந்தம் நிறைவேறும்போது, இந்திய அரசாங்கம் என்பது காங்கிரஸ் கட்சியிடமும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சி பொறுப்பில் இருந்திருக்கிறது. அப்படியானால் லாபமும், நஷ்டமும் இந்த கட்சியோட பொறுப்பாகத்தானே இருக்க முடியும்?. தொடந்து கூறிவருகிறோம் பாஜக அரசு செய்ய வில்லை என்று கூறும் தமிழக முதல்வர், அதன்பிறகு இந்தியாவை எத்தனையோ முறை காங்கிரஸ் ஆண்டுவிட்டது. அப்போது இதற்கான தீர்வு கண்டிருக்கலாமே?. விரைவில் இந்திய அரசு இதற்கான தீர்வு காணயிருப்பதாக சொல்கிறார்கள். தனது சாதனையாக அதை தேர்தலில் பேச இருக்கிறது என்கிறார்கள். எல்லை வரையறையை மாற்றி அமைத்து கச்சத்தீவை இந்திய எல்லைக்குள் கொண்டு வரப்போகிறது. இந்த தகவலை அறிந்து கொண்ட திமுக இப்போது ஏதேதோ பேசத் தொடங்கிவிட்டது என்கிறார்கள் பாஜகவினர். 

எது எப்படியோ, கச்சத்தீவு விவகாரத்தில் அப்போது திமுக, இந்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியாமலும், கொடுத்தது போதுமானதாக இல்லாமலும் இருந்த விசயம் இக்கால தலைமுறையும் அறிந்துவிட்டது. எனவே அடுத்தவர்கள் மீது பழியைபோட்டுவிட்டு தப்பித்துவிடலாம் என்று திமுக நினைக்க கூடாது. தற்போதைய நிலையில் மோடி தலைமையிலான பாஜக அரசு நினைத்தால் மட்டுமே இதுபோன்ற மாற்றங்களை கொண்டுவர முடியும். இது உலகம் அறிந்த உண்மை. எனவே நல்லது நடக்க வேண்டும் என்று நினைத்தால் திமுகவினர் சற்று அமைதியாக இருப்பதே நல்லது. 

இந்தியாவும், இலங்கையும் நெருக்கம் காட்டினால், இலங்கையில் உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்துகிறது பக்கத்து நாடு. இதையெல்லாம் பார்த்துதான் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ள முடியும். இதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அரசியலுக்காக எதைவேண்டுமானாலும் பேசிவிட கூடாது.