கூட்டாம்புளியில் பாஜக சார்பில் மோடி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

kootampuli bjp

கூட்டாம்புளியில் பாஜக சார்பில் மோடி பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி அருகே கூட்டாம்புளியில் பாஜக சார்பில் பிரதமர் நரேந்திர மோடியின்  73 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் பாஜக என்கிற கட்சி அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தது. தற்போது மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் நடைபெற்று வரும் நிலையில் இந்தியாவை தாண்டி பாஜகவின் செல்வாக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவின் குக்கிராமங்களில் கூட நிர்வாகம் பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் மோடியின் 73வது பிறந்த நாளை பாஜகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியில் பாஜக சார்பில் மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.  

இந்த விழாவிற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் தலைமை வகித்து பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி, சிறுபான்மையினர் பிரிவு மாநிலச் செயலாளர் ரூஸ்வெல்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய அணி வடக்கு மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா,  பட்டியலின மாவட்ட தலைவர் பாலச்சந்திர பூபதி, வடக்கு ஒன்றிய தலைவர் எட்வர்ட் ராஜா, ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பிரச்சார பிரிவு செயலாளர் மகாலிங்கம் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள், மோடி படம் பொறித்த டி-ஷர்ட்  மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.