எடப்பாடியின் மீது செங்கோட்டையன் அதிருப்தி - காரணங்கள் என்ன?
A.D.M.K NEWS

கடந்த வாரம் முழுவதும் பத்திரிகைகளிலும், டெலிவிஷன் சேனல்களிலும் பிரதான செய்திகளிலும் இடம் பெற்றவர்- அ.தி.மு,க.வின் முன்னணித் தலைவர்களில் முக்கியமானவரான செங்கோட்டையன். அதுவும் டி.வி. சேனல்களில் நடந்த இரவு நேர ஒரு மணி நேர விவாதம், அவரை மையப் பொருளாக வைத்து நடை பெற்றது.’ செங்கோட்டையனின் கலகக் குரல் ‘ போர்க் கொடி தூக்குகிறாரா செங்கோட்டையன்?’ என்று வெவ்வேறு தலைப்புகளில் அவர் பேசும்பொருளானார்.
இந்தச் ‘ சர்ச்சையின் ஆரம்பப்புள்ளி, நீண்ட காலக் கோரிக்கையாக இருந்த ‘அந்திக் கடவு - அவினாசி திட்டம்’ நடைமுறைக்கு வந்திருப்பதற்காக் விவசாயிகள் அமைப்பு ஒன்று, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய ஒரு பாராட்டு விழா. இந்த விழாவில் எடப்பாடி பழனிசாமியோடு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் சபாநாயகர் தனபால் ஆகியோர் பங்கேற்றனர். இவ்விழாவுக்கு அழைக்கப்பட்ட கொங்கு மண்டல முக்கியஸ்தரான செங்கோட்டையன் மட்டும், இந்த நிகழ்ச்சியை புறக்கணித்தார்.
இதுபற்றி நிருபர்கள் கேள்வி கேட்டபோது, ‘இந்தக் திட்டம் நிறைவேற முதல் கட்டமாக இரண்டரை கோடி ரூபாயை முதல்வராக இருந்த போது ஒதுக்கியவர் செல்வி ஜெயலலிதா; இத்திட்டம் வர வேண்டும் என்று விரும்பியவர் எம்.ஜி.,ஆர்., இவர்களுடைய படங்கள் எல்லாம் விழா அழைப்பிதழில் இல்லை. இது குறித்து அந்த விழா அமைப்பாளர்களிடமே எனது அதிருப்தியைத் தெரிவித்தேன். ஆகவேதான். நான் விழாவுக்குப் போகவில்லை’ என்று கூறினார் செங்கோட்டையன். அதாவது- எடப்பாடி பழனிசாமி மட்டுமே அந்தத் திட்டம் செயலுக்கு வரக்காரணம் என்பது போன்ற சித்தரிப்பை அவர் ஏற்கவில்லை. (விழா அழைப்பிதழில் சீனியரான் செங்கோட்டையன் பெயருக்கு மேலே, எஸ்.பி.வேலுமணி பெயர் இடம் பெற்றிருந்தது. இதற்குக் காரணம், விழாச் செலவுகளுக்கு வேலுமணியின்’ பங்களிப்பு’ இருந்தது. என்கிறார்கள்.)
இவ்வாறு செங்கோட்டையன் அந்த விழா குறித்துப் பொது வெளியில் விமர்சனம், அ.தி.மு.க.வுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது: மீடியாவின்’பரபரப்புச் செய்திப் பசிக்குத் தீனி போட்டது. இது ஒரு நாளளோடுமுடியவில்லை. காரணம், அடுத்த நாளன்று அ.தி.மு.க.வின் டெல்லி அலுவலகத்தை, சென்னை தலைமைக் கழகத்தில் இருந்தபடி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நிகழ்வில், அ.தி.மு.க. வின் இதர முக்கியஸ்தர்கள் உடனிருந்தனர். அந்த நிகழ்ச்சியிலும் சீனியரான செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதுவும், மீடியாவின் கவனத்தை ஈர்த்தது. ஆகவே, செங்கோட்டையன்” என்ற கேள்வி இயல்பாகவே எழுந்தது.
ஒருபுறம் இரட்டை இலையை முடக்கக் கோரும் மனுக்கள் தேர்தல் கமிஷன் முன் பரிசீலனையில் உள்ளது. மறுபுறம் , சென்னை உயர் நீதிமன்றம் அவற்ரைப் பரிசீலனையில் உள்ளது. மறுபுறம், சென்னை உயர் நீதிமன்றம் அவற்றைப் பரிசீலிக்க அனுமதி வழங்கிய பின்னணியில், செங்கோட்டையனின் அதிருப்திக் குரல், அ.தி.மு.க முக்கியஸ்தர்களை கவலையில் ஆழ்த்தியது. போதாதக்குறைக்கு, மீடியாவும் தன்பங்குக்கு, ‘செங்கோட்டையனை பா.ஜ.க. இயக்குகிறதா? ‘செங்கோட்டையனுடன் அ.தி.மு.க. பிரமுகர்கள் ரகசிய ஆலோசனை’ என்றெல்லாம் அடுத்தடுத்து ‘செய்திகளை வெளியிட்டு, செங்கோட்டையன் குறித்த’ சர்ச்சை’ ஓயாமல் பார்த்துக் கொண்டது.
செங்கோட்டையன்னோடு நிழலாகப் பயணிக்கும் ஒருவரோடு பேசியயபோது, கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே, கட்சிதலைமையுடன் கடும் கருத்து வேறுபாடு கொண்டிருப்பதாகச் சொல்கிறார்”கட்சியில் அவரது சீனியாரிட்டிக்கு உரிய அங்கீகாரம் தராமல், 60க்கும் மேற்பட்ட அமைப்புச்செயலாளர்களில் அவரையும் ஒருவராக நியமித்திருப்பது: முக்கிய விஷயங்களில் அவருடன் கலந்து பேசாமல் இருப்பது;சட்டமன்றக் கொறடா’ வாக இருந்தவரை, இப்போது வெறும் எம்.எல்.,ஏ. வாக உட்கார வைத்திருப்பது: நாடாளுமன்றத்தேர்தல் தோல்விக்குப் பிறகு, மாவட்டவாரியாக் சுற்றுப்பயணம் செய்து, கட்சியின் நிலையை அறிந்து வர அமைக்கப்பட்ட ‘களஆய்வுக்குழு’வில் அவரை நியனிக்காதது; மேற்கு மாவட்டங்களில் அவரது முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில் சிலருக்குப் பதவி அளித்தது. என்று எடப்பாடி பழனி செய்த வேலைகள்தான் அவரது கடும் அதிருப்திக்குக் காரணங்கள் பட்டியலிட்டார் அந்த நிழல்புள்ளி.
செங்கோட்டையனுக்கு இத்தகைய அதிருப்திகள் இருப்பதாக்கக் கூறப்படுவது பற்றி, அ.தி.மு.க., முக்கியஸ்தர்கள் சிலரிடம் சுட்டிக் காட்டியபோது அவர்களும், “செங்கோட்டையனுக்குரிய முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை என்பது உண்மைதான்; இந்தப் பிரச்னையை வளர விடுவது நல்லதல்ல; அவர் வேறு கட்சிக்குப் போகமாட்டார். எனினும், அப்படி எதுவும் நடந்து விடாமல் தடுக்க வேண்டும்” என்றனர்.