ஆடு வளர்ப்பதை கிண்டல் செய்வதுதான் சமத்துவ பாதுகாப்பா திமுகவினரே?

Bjp - Dmk

ஆடு வளர்ப்பதை கிண்டல் செய்வதுதான் சமத்துவ பாதுகாப்பா திமுகவினரே?

நாட்டில் சமத்துவத்தை உருவாக்க போகிறோம் என்று சூளுரைக்கிறது திமுக. ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆடு வளர்ப்பார் என்கிற அவரின் தொழிலை குறிப்பிட்டு கிண்டல் செய்து அதன் கொள்கையில் இருந்து வீழ்ந்திருக்கிறது அதே திமுக. 

தமிழக அரசியல் கட்சிகளில் சிலரும், சமூக வலைதளவாசிகள் சிலரும் அண்ணாமலையை ஆட்டுக்குட்டி அண்ணாமலை என்று குறிப்பிட்டு தனக்குதானே ஆனந்தம் கொள்வது வாடிக்கையாக இருக்கிறது. இதனை அண்ணாமலையே பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஒருத்தரின் தொழிலை குறிப்பிட்டு கிண்டல் செய்ய கூடாது என்கிற அடிப்படை அறிவு அவரவருக்குத்தான் வேண்டும் என்கிற கருத்தோடு அவர் அதை விட்டுவிடுகிறார். 

இந்தநிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழக பாஜக எதோ பெரிய தோல்வியை சந்தித்து விட்டதுபோல் மாயையை உருவாக்கி வரும் சில அரசியல் கட்சிகள், அண்ணாமலை பல வழிகளிலும் குத்திக் காண்பித்து வருகின்றனர். ஆனால் அவரோ, இதுவரை இருந்த நிலை வேறு, இப்போது இருக்கிற நிலை வேறு. எப்போதும் இல்லாமல் இப்போது தமிழகத்தில் பாஜக ஓட்டு வங்கி அதிகம் ஆகியிருக்கிறது என்பதை விளக்கி வருகிறார். ஆனால் அதையும் தாண்டி அவரை குறைப்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கிருஷ்ணகிரி அருகே பொது இடத்தில் வைத்து ஒரு ஆட்டின் தலையில் அண்ணாமலையின்  படத்தை தொங்கவிட்டு ஆட்டின் தலையை வெட்டி சிலர் அண்ணாமலையை அவமதித்திருக்கின்றனர். இதை செய்தது அப்பகுதி திமுகவினர்தான். வெட்டிய ஆட்டை பார்த்து, அண்ணாமலை ஆடு பலி ஆடு என்று கோஷமிட்டுள்ளனர். முன்னதாக அந்த ஆட்டை தரையில் போட்டு இழுத்தது, அதன் ரத்தத்தை அண்ணாமலை போட்டோவில் தெளித்தது என அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர். 

ஒருவரையோ, ஒரு இயக்கத்தையோ அல்லது ஒரு இனத்தையோ குறைத்து, இகழ்ந்து பேசுவதின் மூலம் அவைகளின் வளர்ச்சியை தடுக்க முடியும் என்கிற தந்திரம் கடந்த கால வெள்ளைக்காரர்களிடம்தான் இருந்தது. அதே வேலையை திமுகவினர் இப்போது செய்துள்ளனர். இதுவரை இவர்கள் செய்துள்ள இதுபோன்ற அரசியல்தான் தமிழகத்துக்குள்ளும் பாஜகவை வளர்த்துள்ளது என்பதை பாவம் இவர்கள் அறியவில்லை போல் தெரிகிறது. எது எப்படியோ இப்படி அவமதிப்பு செய்வது, அதுவும் குறிப்பிட்ட தொழில் செய்பவரை அந்த தொழிலை குறித்து கிண்டல் செய்வதும் எந்த வகையில் சமத்துவ லிஸ்ட்டில் சேரும் என்று திமுகவினர்தான் விளக்க வேண்டும். தவறு செய்தவர்கள் மீது எந்த அளவில் நடவடிக்கை எடுக்கிறார்களோ அதைவைத்துதான் இவர்களின் சமத்துவ வலிமையை பார்க்கலாம்.