தூத்துக்குடியில் அதிமுக, பிஜேபி டெபாசிட் இழக்க வேண்டும் - தொண்டர்களுக்கு அமைச்சர் அனிதா அட்வைஸ்

D.M.K

தூத்துக்குடியில் அதிமுக, பிஜேபி டெபாசிட் இழக்க வேண்டும் - தொண்டர்களுக்கு அமைச்சர் அனிதா அட்வைஸ்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக, பிஜேபி டெபாசிட் இழக்க வேண்டும். அதற்கு அனைவரும் களப்பணியாற்ற வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார்.   

தூத்துக்குடி நாடாளுமன்ற தேர்தல் முதல்வர் ஸ்டாலின் வருகை குறித்து ஆலோசனை கூட்டம் தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், மீன்வளம் மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன் அதற்கு தலைமை வகித்தார். அப்போதுஅவர்,  கலைஞர் வழியில் தமிழகத்தையும் கட்சியையும் சிறப்பாக வழிநடத்தி வரும் முதலமைச்சரின் உத்தரவு படி இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழக முதலமைச்சர் எல்லா தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்ற அடிப்படையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு ஏழை எளிய மக்களும் பயனடையும் வகையில் ஜாதிமதத்திற்கு அப்பாற்பட்டு பணியாற்றி வருகின்றார். 

இந்நிலையில் நாளை தூத்துக்குடியில் நடைபெறும் புதிய தொழிற்சாலை அடிக்கல்நாட்டுவிழா மற்றும் மழை வௌ்ள காலங்களில் பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை தரும் முதலமைச்சருக்கு அனைத்து அணியை சார்ந்தவர்களும் திரளாக கலந்து கொண்டு வரவேற்பு கொடுப்பது மட்டுமின்றி விழாவிலும் பங்கெடுத்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டும். மார்ச் 1ம் தேதி தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி எம்.பி, மீண்டும் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக தெற்கு மாவட்ட திமுக சார்பில் 32 விருப்பமனு, வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் வேறு யாருவேண்டுமானாலும் கனிமொழி எம்.பி யை வழிமொழிந்து விருப்பமனு அளிக்கலாம். 

எம்.பி தேர்தலுக்காக தொகுதி குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு முழுமையாக எந்த ஒரு கருத்து வேறுபாடின்றி பணியாற்ற வேண்டும். தொகுதியில் போட்டியிடும் அதிமுக, பிஜேபி உள்பட அனைத்து கட்சி வேட்பாளர்களும் டெபாசிட் இழக்க வேண்டும். எந்தவித கருத்து வேறுபாடுமின்றி அனைவரும் ஒருமித்த கருத்தோடு பணியாற்றி கடந்த தோ்தலை காட்டிலும் கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற கடுமையாக அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 

கூட்டத்தில் சண்முகையா எம்.எல்.ஏ, அவைத்தலைவர் அருணாச்சலம், மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரம்மசக்தி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், மாவட்ட துணைச்செயலாளர் ஜெயக்குமார்ரூபன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் எம்.எல்.ஏ டேவிட்செல்வின், மாடசாமி, செந்தூர்மணி, பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார்,  மாவட்ட அணி அமைப்பாளர்கள் ராமஜெயம்,   செல்வகுமார், ரகுராமன், வீரபாகு, சுரேஷ், ஜனகர், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் அம்பாசங்கர், ஸ்டாலின், ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் டாக்டர் சுதானந்தம், ஓன்றிய கவுன்சிலர் நவநீதகிருஷ்ணன், மற்றும் வக்கீல்கள் பூங்குமார், கிருபாகரன், கபடிகந்தன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.