''இந்தியா என்றால் எதோ வடக்கே உள்ள ஊரு’’ - இப்படி அமைச்சர் பேசினால் தவறில்லை..இதை அவையில் சுட்டிகாட்டினால் தவறா? -

Minister E.V.Velu

''இந்தியா என்றால் எதோ வடக்கே உள்ள ஊரு’’ - இப்படி அமைச்சர் பேசினால் தவறில்லை..இதை அவையில் சுட்டிகாட்டினால் தவறா? -

உலகம் முழுவதும் உள்ள இயக்கங்கள் ஒவ்வொன்றிற்கும் கொள்கை இருக்கிறது. எதாவது ஒரு கொள்கைக்காகத்தான் இயக்கம் தோன்றுகிறது. அது மக்களை வழிநடத்தும் நோக்கமாக இருக்கலாம், அதிலிருந்து மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கமாக இருக்கலாம். அடிப்படை தேவைகள் கிடைக்காதவர்களுக்கு உதவும் நோக்கமாகவோ, பாதிக்கப்படுவோருக்கு உதவும் நோக்கமாகவோ இருக்கலாம். அப்படித்தான் இந்தியாவிலும் பல இயக்கங்கள் இருக்கின்றன. 

பல்வேறு சாதி.மதம்,மொழி,இனம் என்றுள்ள மக்களை ஒன்றிணைத்து வழிநடத்தும் மகத்தான பண்புகள் கொண்ட இயக்கங்களை மக்கள் ஆதரிக்கின்றனர். விடுதலை பெறுவதற்கு உதவிய கட்சி, சொந்த கலாச்சார, பண்பாடுகளை பாதுகாக்கிற கட்சிகள் இந்தியாவில் உள்ளன. இத்துடன் குறிப்பிட்ட பிரிவினரின் நலனுக்காக செயல்படும் இயக்கங்களும் உள்ளன. அப்படிப்பட குறிப்பிட்ட கொள்கை கொண்ட கட்சியில் ஒன்றுதான் திமுக. அதாவது திராவிட முன்னேற்ற கழகம். அதாவது திராவிடர்களை முன்னேற்றும் கொள்கை கொண்ட கட்சி. 

பல்வேறு வகையான மக்கள் வாழும் தேசத்தில் எந்த விதத்திலும் பிரிவு வந்துவிட கூடாது என்பதற்காக அரசியல் அமைப்பு சட்டத்தில் தேசிய ஒருமைப்பாடு பாதுகாப்பிற்கு மிகுந்த அக்கறை செலுத்தப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட பிரிவை பிரித்து பேசுவதே தவறு என்கிறது அரசியல் அமைப்பு சட்டம். அதற்கு கடுமையான தண்டனையும் இருக்கிறது. ஆனாலும் சமீபகால அரசியல் நடவடிக்கைகள் அதற்கு எதிராக இருந்து வருவதாகவே தெரிகிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிலர் பிரிவினை பேசும் போக்கு அதிகரித்து வருகிறது. சாதாரண மக்கள் பேசினால், அவர் தெரியாமல் பேசிவிட்டார் என்று எடுத்துக் கொள்ளலாம். அரசியல்வாதி அதுவும் மாநில அமைச்சரே அந்த ஸ்டைலில் பேசினால் அதை எப்படி எடுத்துக் கொள்வது?. அரசியல் அமைப்பு சட்டப்படி மாநில அமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. 

கடந்த 5ம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேய பாவணர் அரசு நூலகத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில்  தமிழக அமைச்சர் எ.வ.வேலு பேசியிருக்கிறார். அங்கு அவர், ‘’இந்தியா என்பதில் நமக்கு எந்த காலத்திலும் எந்த தாக்கமும் இருந்தது கிடையாது. இந்தியா என்றால் எதோ வடக்கே உள்ள ஊரு. நம்மூரு தமிழ்நாடுதான். முடிந்தால் நம்மூரில் திராவிட நாடுனு பண்ணமுடியுமா என்று யோசிப்போம். நம்முடைய எண்ணங்கள் இப்படித்தானே போய்க் கொண்டிருந்தது’’என்று அசால்ட்டாக பேசிவிட்டார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்தியா என்றால் வடக்கே எதோ ஊரு என்றும், திராவிட நாடு பண்ண முடியுமா என்று யோசிப்போம் என்றும் பேசியது அப்பட்டமான பிரிவினைவாதம் என்று குற்றம் சாட்டும் டெட்டிசன்கள், சமூக வலைதளங்களில் அமைச்சரை லெப்ட் அன்ட் ரைக்ட் வாங்கிவிட்டனர். இந்த நிலையில் மாநில அமைச்சர் பேசியதை பிரதமர் மோடியும், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணியும் மக்களவையில் சுட்டிக்காட்டி பேசினர். 

இதுக்கிடையில் அவர்கள் அவையில் சுட்டி காட்டியதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று திமுக சார்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ’’பிரதமர், அமைச்சர் ஆகியோரின் உரை அவையை தவறாக வழிநடத்தும் வகையிலும், அவதூறு பரப்பும் வகையில் இருப்பதாகவும், சபையில் உறுப்பினராக இல்லாத ஒருவர் குறித்தும்,  முன் கூட்டியே தெரிவிக்காமலும் அவையில் குற்றம்சாட்ட முடியாது. பிரதமர், மத்திய அமைச்சரின் கருத்துக்கள் அவையின் அலுவல் மற்றும் நடத்தை விதிகளுக்கு முரணானது. எனவே அவர்கள் பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார். 

இந்த விவகாரம் இப்போது விவாத பொருளாகிவிட்டது. இந்தியா என்பது எதோ வடக்கே உள்ள ஊரு, திராவிட நாடு பண்ண முடியுமா என்று யோசிபோம் என்கிற வார்த்தைகள் உண்மையில் பிரிவினை வாதமாகவே பார்க்க முடிகிறது. தேசியவாதிகளை இது புண்படுத்தியிருக்கிறது. இதுபோன்ற வாதங்களை அனுமதிக்க முடியாது. மாநில அமைச்சர் பேசியது தவறு. அப்படி இருக்கும்போது அவருக்கு ஆதரவாகவும், பிரதமர், மத்திய அமைச்சரின் கருத்துக்கு எதிராகவும் திமுகவினரின் முறையீடல் ஏற்கும்படியாக இல்லை என்கிறார்கள் அரசியல் அறிந்தவர்கள்.