தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை தேரோட்டம் - அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

sivan kovi

தூத்துக்குடி சிவன் கோவிலில் சித்திரை தேரோட்டம் - அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்பு

தூத்துக்குடியில் சிவன் கோவில் சித்திரை தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி தேரை வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். இதில், கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சிவன் கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சிவன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவில் தினமும் காலை, மாலையில் சிறப்புப் பூஜைகள், சுவாமி, அம்பாள் சப்பர வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலையில் கோலாகலமாக துவங்கியது. முன்னதாக காலை ஸ்ரீபாகம்பிரியாள் ஸ்ரீசங்கர ராமேஸ்வரர் மற்றும் விநாயகர், முருகப் பெருமான் ஆகியோருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. அதன்பின்பு சிறிய தேரில் விநாயகரும் முருகப்பெருமானும், பெரியதேரில் அன்னை ஸ்ரீபாகம்பிரியாள் உடன் அருள்மிகு ஸ்ரீசங்கர ராமேஸ்வரரும் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 10.45 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. கீழ ரத வீதியில் இருந்து தொடங்கிய தேரோட்டத்தை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர்.

இதில், கோவில் இணை ஆணையர் அன்புமணி, செயல் அலுவலர் தமிழ்செல்வி, ஆய்வாளர் ருக்மணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் கலைச்செல்வி திலகராஜ், சிவன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் கந்தசாமி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செல்வசித்ரா, அறங்காவலர்கள் சாந்தி, ஜெயலட்சுமி, முருகேஸ்வரி, மந்திரமூர்த்தி, ஆறுமுகம், ஜெயபால், மகாராஜன், பாலகுருசாமி, மாவட்ட பிரதிநிதிகள் சக்திவேல், செல்வகுமார், வட்ட செயலாளர்கள் கதிரேசன், கங்கா ராஜேஷ், சதீஷ்குமார், கவுன்சிலர்கள் சுரேஷ்குமார், ஜாக்குலின்ஜெயா, ஜெயசீலி, முன்னாள் கவுன்சிலர்கள் கோட்டுராஜா, ரவீந்திரன், ராதாகிருஷ்ணன், லாரிபுக்கிங் அசோஷியேசன் சங்க செயலாளர் சுப்புராஜ், திமுக மாநகர ஆதிதிராவிட நல அணி அமைப்பாளர் பரமசிவம், தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அருணாதேவி, கலை இலக்கிய அணி துணைஅமைப்பாளர் சோமநாதன், பகுதி மகளிர் அணி துணை அமைப்பாளர் ரேவதி, தொழிலதிபர்கள் என்.பி அசோக், டி.ஏ.தெய்வநாயகம், கமலஹாசன், பிஎஸ்கே மாரியப்பன், கேஎஸ்பிஎஸ் கண்ணன், அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், மாணவரணி செயலாளர் விக்னேஷ், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச்செயலாளர் திருச்சிற்றம்பலம், வழக்கறிஞரணி துணைச்செயலாளர் சரவணபெருமாள், எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் டைகர் சிவா, பிஜேபி மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், மாவட்ட இந்து முன்னனி செயலாளர் ராகவேந்திரா, அமமுக மாவட்ட அவைத்தலைவர் தங்கமாரியப்பன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தேருக்கு முன்பாக யானை, குதிரை அணிவகுப்புகள், களியல் ஆட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம், மரக்கால் ஆட்டம், பொய்க்கால் குதிரை, ராஜமேளம், செண்டை மேளம், நையாண்டி மேளம், உறுமிமேளம், தப்பாட்டம், சிவகைலாய சிவபூதகண வாத்தியங்களுடன், மகளிர் கோலாட்டம் மற்றும் தேவார இன்னிசையுடன் வேதபாராயணம் பாட, சிலம்பாட்டம் வானவேடிக்கையுடன் மாணவ, மாணவியரின் வீர விளையாட்டுகளுடன் தேரோட்டம் நடைபெற்றது.  தேர் தெற்கு ரதவீதி, மேற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது. தேர் திருவிழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு மற்றும், தேரோட்ட பவனிவிழா குழுவினர் மற்றும் திருக்கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சங்கரன், சுப்பிரமணியன், சண்முகசுந்தரம், மணி, சோமசுந்தரம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

தேரோட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை டவுண் ஏ.எஸ்.பி. கேல்கர் சுப்பிரமணியம் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 300க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேரோட்ட திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.