கூட்டாம்புளி அருள்மிகு ஸ்ரீ சந்தனமுத்துமாரியம்மன் கோவில் கொடை விழா

kovil news

கூட்டாம்புளி அருள்மிகு ஸ்ரீ சந்தனமுத்துமாரியம்மன் கோவில் கொடை விழா

தூத்துக்குடி மாவட்டம், கூட்டாம்புளியில் இந்து நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள் மிகு ஸ்ரீ சந்தனமுத்துமாரியம்மன் கோவிலில் கொடைவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்தாண்டின் கோவில் கொடைவிழா நடைபெற்று வருகிறது. அதற்கான கால்நாட்டுதல் விழா கடந்த 20.08.2024 அன்று நடைபெற்றது. மறுநாள் சனிக்கிழமை மாவிளக்கு பூஜை, திருவிளக்கு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. 25ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சுமங்கலிகள் பூஜையும், மறுநாள் திங்கட்கிழமை அன்னதானம், பல்சுவைநிகழ்ச்சி, வில்லிசை நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று செவ்வாய் கிழமை தீர்த்தக்கரை சென்று வருதல்,பால்குடம் எடுத்தல், நையாண்டி,வாடிபட்டி,பம்பை,உறுமி மேளத்துடன் அம்மனுக்கு சிறப்பு பூஜை, தொடர்ந்து அன்னதானம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

அதுபோன்று இன்று இரவு அன்னதானம், கரகாட்டம்,அம்மனுக்கு நேர்த்திகடன் செலுத்துதல், அம்மனுக்கு முளைப்பாரி எடுத்தல்,அம்மனுக்கு சிறப்பு பூஜை, உற்சவ அம்மன் பூஜை வான வேடிக்கையுடன் இராஜமேளம் முழங்க அம்மன் சப்பரபவனி வருதல் நடக்கிறது. நாளை புதன் கிழமை மதியம் அம்மனுக்கு பொங்கலிடுதல், அம்மன் மஞ்சள் நீராடுதல்,அம்மனுக்கு மதிய பூஜை, முளைப்பாரி பெண்கள் கும்மி கொட்டி, அம்மன் வாழ்த்து பாடுதல் நடைபெறுகிறது. இரவு 7மணி அளவில் இசைக்குழுவினரின் கீதாஞ்சலி நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் கே.பிச்சைக்கனி நாடார்,ஆர்.பி.குணபாலன் நாடார், எஸ்.சுப்புநாராயணன் நாடார், பி.ரவித்திலகர் நாடார் மற்றும் வரிதாரர்கள் செய்து வருகின்றனர்.