பாஜக வெற்றி பெற்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடும் - கனிமொழி அச்சுறுத்தல் உண்மையா?

election news

பாஜக வெற்றி பெற்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடும் - கனிமொழி அச்சுறுத்தல் உண்மையா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய, மாநில அரசுகளுக்கு கொள்கை திட்டங்கள் இருப்பதுண்டு. பெரும்பாலும் அவற்றை நீதிமன்றங்களே நிறுத்துவதில்லை. அதுபோல் முழுக்க முழுக்க மாநில நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் கொள்கை திட்டங்களை மத்தியரசு தடுப்பதற்கில்லை. அப்படி இருக்கும்போது தமிழக திமுக அரசின் கொள்கை சார்ந்த திட்டமான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை மத்தியரசு எதுவும் செய்யப்போறதில்லை. அதற்கான நிதி ஆதாரங்களை திரட்டமுடியாமல் போனால், திட்டத்தை அறிவித்தவர்களேதான் எதாவது காரணத்தை சொல்லி நிறுத்துவதற்கு  வாய்ப்பு இருக்கிறது. 

அப்படி இருக்கும்போது, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி, பாஜக வெற்றி பெற்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை நிறுத்திவிடுவார்கள் என்று தேர்தல் பரப்புரையில் தெரிவித்து வருகிறார். இந்த திட்டத்திற்கான நிதியை திமுக அரசுதான் ஒதுக்கீடு செய்கிறது. 2024-2025 ம் ஆண்டு அத்திட்டத்துக்கான நிதி 13720 கோடியை நிதியமைச்சர் தங்கம்தென்னரசு, பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒதுக்கீடு செய்துள்ளார். அதன் மூலம் சுமார் ஒன்றரை லட்சம் மகளிர் பயனடைய உள்ளனர்.  

இந்நிலையில் பாஜக வெற்றி பெற்றால் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை நிறுத்தப்படும் என்கிற கனிமொழியின் அச்சுறுத்தும் வார்த்தைகளை மக்கள் ஏற்பதாக தெரியவில்லை. மாறாக, கிண்டல் செய்ய துவங்கியிருக்கின்றனர். பெண்கள் மத்தியில் பீதியை கிளப்பிவிட்டு பாஜகவுக்கு ஓட்டு கிடைக்காமல் தடுக்கும் தந்திரம் என்றே பேசுகிறார்கள். எனவே மத்தியில் எந்த ஆட்சி இருந்தாலும், உரிய நிதி ஆதாரங்கள் இருந்து செயல்படுத்தும் எந்த திட்டத்தையும் யாரும் தடுக்க மாட்டார்கள் என்பதே அரசியல் அறிந்தவர்களின் வாதம்.