தமிழக அரசின் கடன் சுமை அதிகரிப்புக்கு மத்தியரசு காரணமா?

Tamilnadu

தமிழக அரசின் கடன் சுமை அதிகரிப்புக்கு மத்தியரசு காரணமா?

தமிழகத்தில் முதலமைச்சர் முதல், அமைச்சர்கள், எம்,எல்.ஏக்கள் மற்றும் திமுக கட்சியினர், அதன் கூட்டணி கட்சியினர் அவ்வப்போது தெரிவித்து வரும் வார்த்தையாக இருக்கிறது தமிழகத்துக்கு மத்தியரசு நிதி தரவில்லை என்பதாகும். அதுதான் காரணம் தமிழக அரசின் கடன்சுமைக்கும் என்று கூட சொல்ல தயங்குவதில்லை. ஆனால் விபரம் அறிந்த சிலர், தமிழகத்திற்கான நிதியை வழங்க கோரி, பார்லிமென்டில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். ஆனால் வேண்டுமென்றே, திமுக ஆட்சியை கொடுமைக்கு ஆளாக்க வேண்டும் என்பதற்காக ஓரவஞ்சனையோடு மத்திய அரசு செயல்படுகிறது என முதல்வர் ஸ்டாலினும், தமிழகத்தில் கடன் சுமை அதிகரிப்புக்கு நிதி நிர்வாகம் காரணம் அல்ல; மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையே காரணம்..என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசும், மத்திய அரசின் மீது மொத்த பழியையும் சுமத்தி வருகின்றனர். 

இந்தியாவில் தமிழகம் மட்டுமல்ல; 27 மாநிலங்களும், எட்டு யூனியன் பிரதேசங்களும் உள்ளன. அந்த மாநிலங்களீல் ஏதாவது ஒன்று, மாநில அரசின் நிதி பற்றாக்குறைக்கும், வாங்கியுள்ள கடன்களுக்கும், மத்திய அரசு நிதி கொடுக்காததே காரணம் என்று கூறியுள்ளனவா?. ஆனால் தும்மினால், இருமினால் கூட, மத்திய அரசு நிதி கொடுக்காததால் தான் தும்மலும், வருகிறது என்று சதா குற்றஞ்சாட்டுகிறது. தங்கள் அரசின் நிர்வாகத்திறமையின்மையை மறைக்க, மத்திய அரசின் மீது பழி சுமத்தி தப்பிக்க பார்க்கிறது. இதைவிட கேலிக்கூத்து, கடந்த 75 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ருபாய் கடன் தான் வாங்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கரை ஆண்டுகளில் , 5 லட்சம் கோடி ருபாய்க்கு கடன் வாங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி. 

தமிழகத்தில் 1967 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ், அக்கட்சி எதற்காகவும் கடன் வாங்கி ஆட்சி நடத்தவில்லை. அரசின் வருவாயை வைத்தே நிர்வாகத்தை நடத்தி வந்தது. ஆனால் அதற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த கட்சிகள் கடந்த 55 ஆண்டுகளாக இலவசங்களை கொடுத்து ஓட்டுக்களை கவர, மாறி மாறி வாங்கிய கடன் தான், 8 லட்சம் கோடி ருபாய்!. ஒரு சாதாரண விவசாயி கூட, திருப்பி கொடுக்கும் சக்தி இருந்தால் மட்டுமே கடன் வாங்குவார். ஆனால் அரசியல்வாதிகளோ, நாமா திருப்பி கொடுக்க போகிறோம் என்ற அலட்சியத்தில் கடன் மீது கடன் வாங்கி குவித்து வைத்துள்ளனர். 

மக்கள் ஆரம்ப காலத்திலேயே இலவசங்களுக்கு மயங்காமல் புறக்கணித்திருந்தால், தமிழகத்திற்கு இவ்வளவு கடன் சுமை ஏறி இருக்காது. இலவசங்களுக்காக ஆட்சியாளர்கள் வாங்கும் கடன், மக்களாகிய தங்கள் தலையில் தான் விடியும் என்று கொஞ்சம் பகுத்தறிவுடன் யோசித்திருந்தால், கடன் ஏற்பட்டிருக்காது. ஆனால், அடுத்த ஆறு மாதங்களில் தமிழகத்தின் கடன் சுமை, 10 லட்சம் கோடி ரூபாய் ஆனாலும் ஆச்சரியபடுவதற்கில்லை என்றனர். 
.!