மோடியை மீண்டும் பிரதமராக்க மக்கள் தயாராக உள்ளனர் - தூத்துக்குடியில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் பேச்சு

BJP NEWS

மோடியை மீண்டும் பிரதமராக்க மக்கள் தயாராக உள்ளனர் - தூத்துக்குடியில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் பேச்சு

தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றி, மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு மக்கள் வாக்களிக்க தயாராக இருக்கின்றனர் என்று  தூத்துக்குடியில் தமாகா வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன் பேசினார்.

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தமிழ்மாநில கட்சியின் வேட்பாளர் எஸ்.டி.ஆர்.விஜயசீலன் போட்டியிடுகிறார். வேட்பாளராக அறிவிக்கபட்டதை தொடர்ந்து இதுவரை முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு மற்றும் ஆசிபெற்று வந்தார். இந்தநிலையில் இன்று(31.03.2024) தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தல் காரியாலயம் திறப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர் சித்தாரங்கன் தலைமை வகித்தார். அம்மா மக்கள் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் டேனியல் சாமுவேல், ஐக்கிய ஜனதாதளம் மாவட்ட செயலாளர் குழந்தைபாண்டி, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சின்னத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

தமிழக பாஜக துணைத்தலைவர் சசிகலாபுஷ்பா, ஓபிஎஸ் அணி மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஏசாதுரை ஆகியோர் காரியாலயத்தை திறந்து வைத்தனர்.  அப்போது வேட்பாளர் எஸ்டிஆர் விஜயசீலன், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நான் போட்டியிடுகிறேன். எனக்கு சைக்கிள் சின்னத்தில் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 

கனிமொழி எம்.பி 5 ஆண்டுகாலம் எந்த திட்டங்களையும் செயல்படுத்தவில்லை. பிஜேபி ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. அதிமுக நமக்கு எதிரியல்ல. திமுக தான் நமக்கு பிரதான எதிரி போட்டியும் அவர்களுக்கும் நமக்கும் மட்டும் தான். தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்து 3வது முறையாக மோடி பிரதமராவார். பல்வேறு கிராமங்களில் சென்று மக்களை சந்தித்த போது அனைத்து தரப்பினரும் பிஜேபி கூட்டணிக்கு வாக்களிக்க தயாராகவுள்ளனர். அதை நாம் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பேசினார். 

பின்னர் சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தூத்துக்குடி மாநகர பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருடன் முன்னாள் எம்.பியும், தமிழக பாஜக துணைத்தலைவருமான சசிகலா புஷ்பா, மாநில நிர்வாகிகள் விவேகம் ரமேஷ், உமரி சத்தியசீலன், வக்கீல் சந்தனகுமார், மாவட்ட அணி நிர்வாகிகள் வக்கீல் சண்முகசுந்தரம், வக்கீல் வாரியர், வக்கீல் நாகராஜ், வக்கீல் சுரேஷ்குமார், சுவேதா், உஷாதேவி, வௌ்ளத்தாய், முன்னாள் கவுன்சிலர் லதா, மற்றும் தங்கம்,  ரவீசந்திரன், தமாகா நகர செயலாளர் ரவிக்குமார், தூத்துக்குடி தொகுதி பிஜேபி பொறுப்பாளர் பிரபு உள்பட கூட்டணி கட்சியை சேர்ந்த பலர் உள்ளனர்.