முதல்வரின் சிந்து சமவெளி நாகரிக தேடல், தமிழருக்காகவா..? ஆங்கிலேயருக்காகவா.?

M.K.Stalin

முதல்வரின் சிந்து சமவெளி நாகரிக தேடல், தமிழருக்காகவா..? ஆங்கிலேயருக்காகவா.?

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழரின் தொன்மையை முழுமையாக அறிய அவதாரம் எடுத்திருப்பதுபோல் பேசியிருக்கிறார். இது மிக மிக அவசியம்தான் என்றாலும், இந்த தேடல் யாருக்கானது என்கிற கேள்வியும் எழத் தொடங்கியிருக்கிறது. இதை அறிவித்த இடத்தில் ஒரு வெள்ளக்காரருக்கு சிலை அமைக்க அடிக்கல் நாட்டியிருப்பதால் அப்படி யோசிக்க முடிகிறது என்கிறார்கள் பொதுமக்கள்.  

சிந்து சமவெளி பண்பாட்டு கருத்தரங்கு, சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் நேற்று துவங்கியது. அதில், “சிந்துவெளி எழுத்து முறையை, தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழிவகைகளை வெளிக்கொணரும் தனிநபர்கள் மற்றும் அமைப்புக்கு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசா வழங்கப்படும்” என, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். 

இதில், தமிழக தொல்லியல்துறை ஆலோசகர் கா.ராஜன், இணை இயக்குனர்  ஆர்.சிவானந்தம் ஆகியோர் எழுதிய, ’சிந்துவெளி வடி வடிவங்களும், தமிழ்நாட்டுக் குறியீடுகளும்’ என்ற ஆய்வு நூலை வெளியிட்டு, மூன்று நாள் கருத்தரங்கை துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இந்திய துணை கண்ட வரலாற்றில், நமக்கான இடத்தை நிலைநிறுத்துவது தான், நம்முடைய நோக்கம் ஆரியமும், சமஸ்கிருதமும்தான், இந்தியாவின் மூலம் என்ற கற்பனை வரலாற்றை, பலரும் சொல்லி வந்தனர். அதை மாற்றியது ஜான் மார்ஷல் ஆய்வு.

சிந்துவெளி நாகரிகம் ஆரியத்திற்கு முற்பட்டது. ஆங்கு பேசப்பட்டது திராவிட மொழியாக இருக்கலாம் என நூற்றாண்டுகளுக்கு முன்பு  சொன்ன அவரது குரல், இன்று வலுப்பெற்று இருக்கிறது, நன்கு கட்டமைக்கப்பட்ட வளர்ச்சி பெற்ற ஒரு நாகரிகம்,சிந்துசமவெளியில் இருந்தது.  சிவகங்கை மாவட்டம் கீழடியில், தற்போது நடந்து வரும் அகழ்வராய்ச்சி, உலக அளவில் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திருக்கிறது. துமிழக தொல்லியல் துறையால் நடத்தப்படும் அகழாய்வில், தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என, உறுதி செய்யப்பட்டு உள்ளது.கீழடி அருட்காட்சியகம் போலவே, பொருநையிலும் அருட்காட்சியகம் உருவாக்கப்பட்டு வருகிறது

எட்டு இடங்களில் அகழ்வாராய்ச்சி நடக்கிறது. இதன்முடிவுகள், பெரும் உற்சாகத்தை தருவதாக அமைந்துள்ளன. தமிழ்பண்பாட்டை பேணிகாப்பது தான். துமிழக அரசின் தலையாய கடமை, இதை உலகுக்கு உணர்த்தும் வகையில், மூன்று முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுகிறேன் சிந்துவெளி பண்பாட்டின் எழுத்து முறையை, இன்னும் நம்மால் தெளிவாக புரிந்து கொள்ளமுடியவில்லை. நூறு ஆண்டுகளை கடந்தும், தீர்க்கப்படாத இந்த புதிரை புரிந்து கொள்ள,உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியியல் தமிழ் அறிஞர்கள், கணினி வல்லுனர்கள் உட்பட பலரும் முயற்சித்து வருகின்றனர். அதை ஊக்கப்படுத்தும் வகையில், உரிய விடையை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்துமுறையை தெளிவாக புரிந்துகொள்ள உதவும் வழிவகையை, தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கெணரும் நபர்கள் மற்றும் அமைப்புக்கு, ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசாக வழங்கப்படும்.

சிந்துவெளி பண்பாடு குறித்து தொடர் ஆராய்ச்சிகளை,தமிழக தொல்லியல்துறையுடன் இணைந்து, ரோஜா முத்தையா நூலகத்தின் சிந்துவெளி ஆராய்ச்சிமையம் மேற்கொள்ள, தொல்லியல்அறிஞர் ஜராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வறிக்கை அமைக்க இரண்டு கோடி ரூபாய் வழங்கப்படும்.

தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள், கல்வெட்டியல் ஆய்வாளர்கள்.நாணவியல் வல்லுனர்கள் ஆகியோரை ஊக்கப்படுத்த,ஆண்டுதோறும் இரண்டு அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அறிவியல் முறைப்படி, சான்றுகள் அடிப்படையில், தமிழ் சமூகத்தின் தொன்மையை, அறிவுலகம் இப்போது ஏற்றுக்கொள்ள துவங்கி இருக்கிறது. இந்திய துணை கண்டத்தின் வரலாற்றை, தமிழை தவிர்த்துவிட்டு இனி எழுத முடியாது என்று நாம் உரக்க சொல்வோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன்,சேசர்பாபு, தலைமைசெயலாளர் முருகானந்தம், தொல்லியல் ஆய்வு வல்லுனர்கள் கிரெக் ஜாமிசன், ராஜன், நயன்ஜோத் லஹிரி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டிருந்தனர். 

தமிழின் தொன்மை, தமிழரின் தொன்மையெல்லாம் முழுமையாக வெளியே கொண்டு வர தீட்டப்படும் எந்த திட்டத்தையும் பொதுமக்கள் ஆதரிக்கின்றனர். அதுபோல் இந்த திட்டத்தையும் ஆதரிக்கவே செய்கின்றனர். அதேவேளை, தமிழின வரலாற்றை வெளியே கொண்டு வருகிறோம் என்கிற பெயரில் ஆங்கிலேயருக்கு சிலை அமைத்து அவர்களை பெருமைபடுத்துவதாகவே தெரிகிறது. ஒருவேளை இந்த முயற்சி கூட ஆங்கிலேயரை பெருமைபடுத்தி ஆரியரை அந்நியபடுத்துவதற்குதானோ என்கிற சந்தேகம் வருகிறது. ஆரியர் குறித்து முதல்வர் கூறியிருக்கும் கருத்தை மையமாக வைத்துதானே ஆய்வுகள் நடக்கும். அப்படியானால் உண்மையில் தமிழ் இனத்துக்கான ஆய்வாக இருக்குமா? அந்த பெயரில் ஆங்கிலேயரை தூக்கியும், ஆரியரை கீழிறக்கும் வகையிலானதாக இருக்குமா என்று பொதுமக்கள் சந்தேகம் கிளப்புகின்றனர்.