புதியம்புத்தூரை மீண்டும் குட்டி ஜப்பானாக மாற்றுவோம் - கனிமொழி எம்.பி வாக்குறுதி

புதியம்புத்தூரை மீண்டும் குட்டி ஜப்பானாக மாற்றுவோம் - கனிமொழி எம்.பி வாக்குறுதி

புதியம்புத்தூரை மீண்டும் குட்டி ஜப்பானாக மாற்றுவோம் என்று  ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம் புதியம்புத்தூரில் இந்தியாவெல்வது நிச்சயம் என்ற தலைப்பில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசினார்.  

இந்த கூட்டத்திற்கு, ஒட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா, தூத்துக்குடி மத்திய ஒன்றியலாளர் கேகேஆர்.ஜெயக்கொடி, மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் சுப்ரமணியன், கிழக்கு ஒன்றிய செயலாளரும் மாப்பிள்ளையுரணி பஞ். தலைவருமான சரவணக்குமார், கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, வடக்கு ஒன்றிய செயலாளர் ராமசாமி, கழக மகளிரணி ஜெசி பொன் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

இதில், தமிழக மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையேற்று பேசினார். மேலும் இதில் ஒட்டபிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு ஒன்றிய செயலாளருமான எம்.சி.சண்முகையா, சிபிஎம்.மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், திமுக மாணவரணி தலைவர் ராஜூவ் காந்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பேசினர். 

கனிமொழி எம்.பி பேசுகையில், பலருடைய மனதிலும் தற்போது எழுந்துள்ள கேள்வி பிரதமர் 400, 370 இடங்களில் பிஜேபி வெற்றி பெறும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருவதுதான் தற்போது ஆட்சியில் இருப்பவர்களை வீழ்த்த முடியாது என்று ஒன்றும் கிடையாது. தன்னம்பிக்கையுடன் அனைவரும் பனியாற்றினால் வீழ்த்திவிடலாம். வரும் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி நிச்சயம் வட மாநிலங்களில் ஓரு பிம்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அது நடைபெற வாய்ப்பு இல்லை. மாற்று ஆட்சி வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உருவாகிவுள்ளது. கர்நாடகா பிஜேபி தோல்வி, காங்கிரஸ் வெற்றி தெலுங்கானா காங்கிரஸ் வெற்றி, மேற்கு வங்காளம் மம்தாபனார்ஜி பக்கமே இவர்கள் செல்ல முடியாது. கேரளாவில் தடம் பதிக்க  முடியாது. தமிழகத்தில் திமுக தலைமையில் வலுவான கூட்டணி இப்படி இருக்கும் சூழ்நிலையில் இவர்கள் கூறும் கணக்கு எப்படி நடைமுறைக்கு சாத்தியப்படும். அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை மூலம் பலகோடிகளை பெற்றுக் கொண்டு 2018ல் பிஜேபி அரசு தனக்கேற்றாற் போல் ஒரு சட்டத்தை இயற்றினார்கள். 

பல சாதனை திட்டங்கள் தொடர்ந்து நடைமுறை படுத்துவதால் தமிழ்நாட்டில் விடியல் பயணம் தொடர்கிறது. தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் உள்ளிட்டவர்களை பிரித்து பார்த்து செயல்படுபவர்கள் தான் இந்துக்களுக்கு எதிரிகள் திமுக இந்துக்களுக்கு எதிரி அல்ல. இது நாட்டுமக்களுக்கு தெரியும் இட ஒதுக்கீட்டை நாம் ஆதரிக்கிறோம். அவர்கள் எதிர்க்கிறார்கள். எல்லோருடைய உரிமையையும் பிஜேபி அரசு பறிப்பது மட்டுமின்றி அமைதியின்மையை உருவாக்கி வருகிறது. அதனால் இந்த ஆட்சியை மக்கள் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். வேலை வாய்ப்பை கொடு என்றால் பக்கடா விற்பனை நீசெய் என்று சொல்கிறார்கள். இது தான் உங்கள் சாதனை நமக்கெல்லாம் கிடைக்கின்ற நல்ல சந்தர்ப்பம் தேர்தல். இதை பயன்படுத்திக் கொண்டு அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும். புதியம்புத்தூர் ஒரு காலத்தில் குட்டி ஜப்பானாக திகழ்ந்தது. இங்கிருந்து தான் பல மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஆடைகள் சென்றன. இனி அந்த நிலைமையை மீண்டும் கொண்டு வருவோம் எல்லோரும் திரும்பி பார்க்கும் இடமாக இந்த புதியம்புத்தூர் இருக்கும். இந்திய திருநாட்டில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் தமிழகம் புதுவை உள்பட 40 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம் என்று பேசினார். 

இந்நிகழ்ச்சியில் வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், மாவட்ட ஊராட்சி தலைவி பிரம்மசக்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டேவிட் செல்வின், செந்தூர்மணி, மாடசாமி, மாவட்ட அவைத்தலைவர் அருணாசலம், தூத்துக்குடியூனியன் கவுன்சிலர் அந்தோணி ஜேசுபாலன், சாயர்புரம் கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் அறவாழி, ஏரல் பேருராட்சி முன்னாள் துணைத்தலைவர் மணிவண்ணன், சிறுபாண்மையினர் அணி புதுக்கோட்டை கே.பி.ராஜா ஸ்டாலின், மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர் முடிவில் ஒட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் எல்.ரமேஷ் நன்றி கூறினார்.