"பல்லுயிர் பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாடு" பற்றிய பயிலரங்கம் - கோவையில் நடந்தது
kovai news
தமிழ்நாடு வனத்துறையின் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் "பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு" பற்றிய ஒரு பயிலரங்கம் 30 மற்றும் 31 ஜூலை 2024 அன்று CASFOS கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது.
தமிழ்நாடு வனத்துறையின் தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் "பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு" பற்றிய ஒரு பயிலரங்கம் 30 மற்றும் 31 ஜூலை 2024 அன்று CASFOS கோயம்புத்தூரில் நடத்தப்பட்டது.
பயிலரங்கை, சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் மற்றும் வனத்துறை முதன்மை அரசு செயலர் செந்தில்குமார் துவக்கி வைத்தார். வனமுதன்மை தலைமை வனப் பாதுகாவலர் வனத்துறை தலைவர் சுதன்ஷு குப்தா, முதன்மை தலைமை வன பாதுகாவலர் & தலைமை வனஉயிரின காப்பாளர் ஸ்ரீனிவாஸ் ஆர் ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் & தலைமை திட்ட இயக்குநர் அன்வர்தீன், TBGPCCR மற்றும் புது தில்லி, இந்தியா அலுவலகம் மூத்த பிரதிநிதி, JICA வகாமட்சு எய்ஜி, தமிழ்நாடு வனத் துறையின் அனைத்து மூத்த அதிகாரிகள், தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் பணிகளைச் செயல்படுத்தும் மாவட்ட வன அலுவலர்கள், உதவி வனப் பாதுகாவலர், வாழ்விட மறுசீரமைப்பு, புல்வெளி மறுசீரமைப்பு, பாதுகாப்பு போன்ற துறைகளில் வல்லுநர்கள் பங்கேற்றனர்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் ,திருநெல்வேலி மண்டலம், தூத்துக்குடி வனக்கோட்டத்திற்கு 2023-24 ஆம் ஆண்டிற்கான "புல்வெளி மறுசீரமைப்பு" யை சிறப்பாக செயல்படுத்தியதற்காக சிறந்த கோட்ட மேலாண்மை அலகு (DMU) விருது வழங்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் வனச்சரகத்திற்குட்பட்ட வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் 20 ஹெக்டேர் பரப்பளவில் புல்வெளி சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த புல்வெளி மறுசீரமைப்பு பணி, வல்லநாடு வெளிமான் சரணாலயத்திற்கு புது உயிர்ப்பை அளித்துள்ளது. வெளிமான்கள், புள்ளிமான்கள் மற்றும் கடமான்கள் சரணாலயத்திற்குள் புதிதாக புனரமைக்கப்பட்ட புல்வெளியைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன.
நடப்பு நிதியாண்டிலும் (2024-25) இதேபோன்ற புல்வெளி சீரமைப்புப் பணிகள் வல்லநாடு வெளிமான் சரணாலயத்திற்குள் பொருத்தமான இடங்களில் மேற்கொள்ளப்படும். வனவிலங்குகளின் வாழ்விடங்களில் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைக் குறைப்பதில் இந்தப் பணிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
nadunilai.com