குரும்பூர், அம்பலசேரி பள்ளிகளில் வகுப்பறைகள் திறப்பு - சகோ. மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்
Nazareth news
நாசரேத்,ஆக.02:குரும்பூரில் தமிழக அரசின் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புதிய வகுப்பறையை சகோ. மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தார்.
தமிழக அரசின் நமக்கு நாமே திட்டம் மற்றும் இயேசு விடுவிக்கி றார் புது வாழ்வு சங்கம் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் ஊராட்சிஒன்றியநடுநிலைப்பள்ளி புதிய வகுப்பறை 30 லட்சத்தில் கட்டப்பட்டது. இதில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கத்தின் சார்பில் ரூபாய் பத்து லட்சம் பங்குத் தொகையாக வழங்கப்பட்டது.
புதிய வகுப்பறை கட்டட திறப்பு விழா ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஜனகர் தலைமையில் நடைபெற்றது. அங்க மங்கலம் ஊராட்சிமன்றத் தலைவர் பானுப்பிரியா பாலமுருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாக்கியம் லீலா, பொறியாளர் வெள்ளப்பாண்டி,கிள மென்ட் எபனேசர் ஆகியோர் முன் னிலைவகித்தனர்.புதியவகுப்பறை கட்டிடத்தை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ.மோகன் சி. லாசரஸ் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்.விழாவில் சிராஸ்தீன், இம்ரான், கசாலி, சாகுல் ஹமீது மற்றும் ஊர் பொதுமக்கள் திரளாககலந்துகொண்டனர். முடி வில் தலைமை ஆசிரியை ஜெசிராணி நன்றி கூறினார்.
இதேபோல் அம்பலசேரி ஊராட்சி உயர்நிலைப் பள்ளியில் வகுப்பறையை புதுப்பித்து அதனை சகோ. மோகன் சி. லாசரஸ் திறந்து வைத்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்தி ருநகரி ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட அம்பலச்சேரியில் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளியின் வகுப்பறை மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டது.இதனை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய புது வாழ்வு சங்கம் மூலம் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் மதிப் பில் வகுப்பறையை சீரமைத்து அதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஆழ்வார்திருநகரி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் ஜனகர் தலைமை வகித்தார்.கட்டா ரிமங்கலம் ஊராட்சி மன்றத் தலை வர் கீதா கணேசன் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் ஜீவா வரவேற்று பேசினார்.
விழாவில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனரும் புது வாழ்வு சங்க நிறுவனருமான சகோ. மோகன் சி. லாசரஸ் ரிப்பன் வெட்டிதிறந்துவைத்தார்.விழாவில் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் கள்நயினார்,சிதம்பரம்,பள்ளிமேலா ண்மைகுழுத்தலைவர் சாராள், கிள மெண்ட் எபனேசர்,எட்வின் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.