குளங்கள் சீரமைக்க, தண்ணீர் திறந்துவிட காலதாமதம் - விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு பாஜக மனு

BJP NEWS

குளங்கள் சீரமைக்க, தண்ணீர் திறந்துவிட காலதாமதம் - விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் நஷ்ட ஈடு கேட்டு பாஜக மனு

குளம், குட்டைகள் சேதமடைந்து பல மாதங்கள் ஆகியும் அவைகள் குறித்த காலத்திற்குள் சீரமைக்கப்படவில்லை. அணையில் போதிய அளவில் தண்ணீர் இருந்தும் அதனை திறந்துவிடவில்லை. மேலும் காலதாமதமாகும் பட்சத்தில் பிசானசாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5 லட்ச ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்க வேண்டும்  என்று கேட்டு தெற்கு  மாவட்ட  பாஜக தலைவர்  சித்ராங்கதன், மாவட்ட கலெக்டர் இளம்பகவத்திற்கு மனு அனுப்பி உள்ளார். 

அந்த மனுவில், தூத்துக்குடிமாவட்டத்திற்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து வரும் நீரானது பாசனத்திற்காக மருதூர் மேலக்கால் வழியாக சென்னல்பட்டி, தத்தநேரி, வசவப்புரம், விட்லாபுரம், முத்தாலங்குறிச்சி நாட்டார்குளம், ஆதாழிகுளம், செய்துங்கநல்லூர், கருங்குளம், தூதுகுழி புளியங்குளம், கால்வாய், வெள்ளுர், தென்கரை, பெரியகுளம், முதலாம்மொழி, புதுகுளம், பிள்ளையன்விளைகுளம், கீழபுதுக்குளம், வெள்ளகுளம், தேமாங்குளம் போன்ற குளங்களுக்கு பாய்ந்து விவசாய நிலங்களுக்கு குளங்கள் வாயிலாகவும் நேரடியாகவும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு பாசனவசதியை அளித்துவருகிறது. 

இந்த குளங்கள் எல்லாம் நிரம்பிய பிறகு வெளியேறும் உபரிநீர் செங்குளம், உடையார்குளம், பொட்டல்குளம், சடையநேரி, முதலூர் ஊரணி, வைரவன் தருவைகுளம், புத்தன்தருவைகுளம் போன்றகுளங்களுக்கும் பாய்ந்து பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்யது வருகிறது. அதேபோல் மருதூர் கீழக்கால் வழியாக பாயும் நீரானது கலியாவூர், மணக்கரை, தோழப்பன்பண்னை, பத்மநாபமங்களம், இசவன்குளம், ஸ்ரீவைகுண்டம் கஸ்பா, ஸ்ரீமூலக்கரை, பேரூர்குளம், பராக்கிரம பாண்டியன்குளம், சிவகளைகுளம், பெருங்குளம் போன்ற குளங்களுக்கும் நேரடிபாசனமாக 16 கி.மீஅளவில் பாய்ந்து   8ஆயிரம் ஏக்கர் விவசாயநிலங்களுக்கு பாசனவசதிஅளித்து வருகிறது. இந்த நீர் ஆதாரத்தை நம்பி தூத்துக்குடி மாவட்டத்தில் கார், பிசானம், முன்கார் என முப்போகமும் சாகுபடிகள்நடைபெற்று வந்த நிலையில். தற்போதய பிசான சாகுபடி பருவகாலம் என்பதால் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை பாசனத்திற்காக நீரை திறப்பது வழக்கம். 

அணைகள்மற்றும் தாமிரவருணி ஆற்றில் போதிய அளவில் நீர்வரத்து இருந்தும் இதுவரையில் மருதூர்மேலக்கால், கீழக்கால் வழியாக பாசனத்திற்காக நீர்திறக்கப்படாமல் ஆற்றுநீர் கடலில் கலந்து வருகிறது. இதனால் பாசனத்திற்கான பயன்படுத்தும் குளங்கள் தற்போது வரைநீரின்றி வறண்டுகாணப்படுகிறது. இதனால் பிசான சாகுபடிக்கான ஏற்பாடுகளை செய்துவந்த விவசாயிகள்பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 

கடந்த 2023 ஆம் ஆண்டுஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பெரும்பாலான குளங்கள் கால்வாய்கள் சேதமடைந்ததால் அதற்கான சீரமைப்பு பணிகளை கடந்த ஏப்ரல் 2024-க்குள் முடிக்க பாரதிய ஜனதா கட்சிதொடர்ச்சியாக வழியுறுத்தி வந்த நிலையில் அதைபற்றி எதுவும் கண்டுகொள்ளாது அலட்சியபோக்குடன் முறையான திட்டமிடுதல் இல்லாமல் கிட்டத்தட்ட ஆறுமாதங்களுக்கு மேலாக எந்தவித சீரமைப்பு பணிகளையும் மேற்கொள்ளாமல் இருந்த பொதுபணித்துறையின் செயல்பாடுமிகவும்  கண்டனத்திற்குரியது.

இப்படியாக ஆறுமாதகாலமாக கால்வாய்கள் மற்றும் மடைகளை சீரமைக்காமல் பொதுபணித்துறையானது மெத்தனமாகஇருந்து விட்டு தற்போதைய பிசான சாகுபடிக்கான பருவகாலத்தில் கால்வாய்கள் மற்றும் மடைகளை சீரமைப்பதாக கூறி பாசனத்திற்கான நீரை திறந்து விடாமல் வீணாக கடலில்கலக்கவிட்டு வருகிறது. பிசான சாகுபடிக்கான பருவமான அக்டோபர் மாதத்தில் சாகுபடி செய்யாமல் பருவம் தவறி  பயிர்செய்தால் போதிய விளைச்சல்இருக்காது என்று விவசாயிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

எனவேமாவட்ட நிர்வாகம் மெத்தனபோக்கை கடைபிடித்துவரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீதுஉரிய நடவடிக்கை எடுக்கவும், தங்களது நேரடிப்பார்வையில் போர்க்கால அடிப்படையில் விரைந்து கால்வாய்கள், மடைகள் மற்றும் பாசனம் தொடர்பானபகுதிகளை சீரமைக்கவும், தூத்துக்குடிமாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் பிசான சாகுபடியில் ஈடுபடுவதற்கான போதிய உதவிகளைவிரைந்து செய்துதர வேண்டும் என்றும், மேலும் காலதாமதம் ஆகும் பட்சத்தில் பிசான சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 5 லட்சன் ரூபாய் வீதம் நஷ்டஈடு வழங்கி விவசாயிகளையும், விவசாய நிலங்களையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடபட்டுள்ளது.