அடுக்கடுக்காக புகார் தெரிவித்த நிர்வாகி - கடுப்பான மாநில தலைவர் - தூத்துக்குடி காங்கிரஸ் கட்சிக்குள் மல்யுத்தம்
Congress News
சமீபத்தில் தூத்துக்குடியில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது. இதில் மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டிருந்தனர். செல்வப்பெருந்தகை தங்குவதற்கு டிஎஸ்எப் பிளாஸாவில் ரூம் போடப்பட்டிருந்தது. அந்த ஹோட்டல் ரூம்பிற்கு செல்வப்பெருந்தகை லிப்ட் வழியாக அழைத்து செல்லப்பட்டார். அவருடன் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் உடன் சென்றனர். அப்போது வடக்கு மாவட்ட பதவியை எதிர்பார்த்திருக்கும் மாநில செயற்குழு உறுப்பினர் ஒருவர், மாவட்ட காங்கிரஸ் நிர்வாகம் குறை சொல்லிக் கொண்டே சென்றாராம். ஒரு கட்டத்தில், சேர்க்கப்பட்ட உறுப்பினர்கள் போலியானது என்றும் கூறியிருக்கிறார். அப்படியானால், அவர்களுக்கு நான் அடையாள அட்டை கொடுக்கிறேன். நானும் தவறு செய்கிறேன் என்று சொல்கிறீர்களா? என்று மாநில தலைவர் திருப்பி கேட்டிருக்கிறார்.
அப்போது அருகில் நின்ற கட்சி நிர்வாகி ஒருவர், புகார் தெரிவித்த நிர்வாகியின் தோள் மீது கை வைத்து இப்போ வேண்டாம் ரூம்புக்கு போய்விடுவோம் என்று சொல்லும் வகையில் சைகை காட்டியிருக்கிறார். ஆனால் அவர் தன் தோளில் கை வைத்ததை தவறு என்று அவரை கடுமையாக பேசியிருக்கிறார் புகார் தெரிவித்த நிர்வாகி. அப்போது மாநில தலைவர் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவருமே அதிர்ந்துபோய்விட்டனராம். எதிர்காலத்தில் பதவிக்கு வரவேண்டும் என்கிற விருப்பம் வைத்திருக்கும் நபர்களுக்கு இப்படி கோபம் வரக்கூடாது என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனராம். தூத்துக்குடி காங்கிரஸ் வட்டாரத்துக்குள் இப்போது இந்த அதிரடியான நடவடிக்கைதான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது.
nadunilai.com