கேரிபேக், பிளாஸ்டிக் கப் வேண்டாம் - தொடர்ந்து வலியுறுத்தும் மேயர் ஜெகன் பெரியசாமி
N.P.Jegan News
தெரியாத விசயத்தை ஒரு முறை சொல்லலாம் அல்லது இரண்டு, மூன்று முறை கூட சொல்லலாம். ஆனால் ஒவ்வொரு மக்கள் சந்திக்கும் கூட்டங்களிலும் பொதுமக்கள் கேரிபேக், பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என பகுதி சபா கூட்டங்களில் மேயர் ஜெகன் பெரியசாமி கேட்டுக் கொண்டே இருக்கிறார். வழக்கமா அவர் சொல்றதுதானே என்று அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல் அவர் கூறும் வேண்டுகோளின் அவசியத்தை உணரவேண்டும். பிளாஸ்டிக் கப், கேரிபேக்கெல்லாம் அரசால் தடைசெய்யப்பட்ட பொருட்கள். அது நேரடியாக மக்கள் உடல் நலத்தை பாதிக்கிறது. அதற்காக மட்டும் மேயர் சொல்லவில்லை. இதுபோன்ற பொருட்கள் கழிவு நீர் கால்வாய்க்குள் விழுந்து கழிவு நீர் செல்வதில் மிகுந்த சிரமத்தை கொடுக்கிறது. போதாத குறைக்கு சிலர், கழிவு தண்ணீர் அகற்றுவதில் உள்ள சிக்கலை கொஞ்சமும் மனதில் கொள்ளாமல் கால்வாய்க்குள் கழிவு பொருட்களை போட்டுவிடுகின்றனர். இது அத்தனையிலும் மோசமான நடவடிக்கை என்றே பார்க்க முடிகிறது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டங்கள் இன்று நடைபெற்றது. 20வது வார்டு பகுதி சபா கூட்டம் போல்பேட்டை கீதாஹோட்டல் வளாகத்தில் நடைபெற்றது. இதில், மேயர் ஜெகன் பெரியசாமி பங்கேற்று பேசுகையில், திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க மாநகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டபின் 45 மாத காலத்தில் 60 வார்டுகளிலும் பொதுமக்கள் நலன் கருதி அனைத்து பணிகளும் பாரபட்சமின்றி நடைபெற்று வருகிறது. கடந்த 20 மாத காலமாக மாநகராட்சி மண்டல அலுவலகங்களிலும் வாரந்தோறும் புதன்கிழமை குறைதீர்க்கும் முகாமும் நடைபெறுகிறது. இந்நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் மூலம் பொதுமக்கள் மாநகராட்சி சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை அளித்ததில் அனைத்திற்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. தற்போது 60 வார்டுகளிலும் பகுதி சபா கூட்டம் நடைபெறுவதின் மூலம் அரசாங்கத்தை தேடி அலுவலகங்களுக்கு சென்ற நிலை மாறி மக்களை தேடி சென்று குறைகளை கேட்டறிந்து தீர்க்கும் நிலை திமுக ஆட்சியில் தளபதியார் வழியில் நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதுபோன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு உங்களுடன் கலந்துரையாடி அதை தீர்த்து வைப்பதில்தான் எங்களுக்கு மட்டும் மகிழ்ச்சியல்ல உங்களுக்கும்தான் இதையும் கடந்து அழைப்பேசி வாயிலாக வரும் அழைப்புகள் குறுந்தகவல்கள் மாநகராட்சி இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும் புகார் மூலம் அனைவற்றிற்கும் குறிப்பெடுத்துக்கொண்டு அதை முறைப்படுத்தி செய்து வருகிறோம். கடந்த காலத்தில் தூத்துக்குடி மாநகராட்சி என்ன நிலையில் இருந்தது. இப்போது எந்தநிலையில் இருக்கிறது என்பதை அனைவரும் அறிவீர்கள் சாலை கால்வாய் மின்விளக்கு போன்ற கட்டமைப்பு பணிகைள முறைப்படுத்தி எல்லா பகுதிகளுக்கும் குடிநீர் தட்டுபாடின்றி வழங்கப்படுகிறது. மக்கள் மாநகராட்சியோடு ஓத்துழைக்க வேண்டும். அதிலும் குறிப்பாக கேரிபேக், பிளாஸ்டிக் கப் உள்ளிட்ட தமிழக அரசால் தடைசெய்யப்பட்டுள்ள பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். குறிப்பாக பூக்கடை, கறிக்கடை, மீன்கடை போன்றவற்றிலிருந்துதான் அந்த பை வருகின்றது. அதை பொதுமக்கள் வாங்க மாட்டோம் என்று உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நீர் வழித்தடங்களில் பல்வேறு அடைப்புகள் மூலம் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இனிவரும் காலங்களில் அதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளோம். வளர்ச்சி ஓன்றுதான் குறிக்கோள் என்று எல்லோரும் எதிர்கால தலைமுறையினர் நலனை கருத்தில் கொண்டு இணைந்தே பணியாற்றுவோம் என்றார்.
கூட்டத்தில், மாநகராட்சி அலுவலர் கணேசன், பகுதி சபா உறுப்பினர் ஐசக், வட்டச்செயலாளர் ரவீந்திரன், மாவட்ட பிரதிநிதி நாராயணன், வார்டு அவைத்தலைவர் அற்புதராஜ், வட்டப்பிரதிநிதி அருணகிரி, பெரியசாமி, பாலசுப்பிரமணி, வசந்த், ஸ்ரீதரன், ராஜ்குமார், குமார், இசக்கி மற்றும் வார்டுக்குட்பட்ட பொதுமக்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
nadunilai.com