புதுக்கோட்டை அருகே மர்மநபர்கள் அட்டகாசம் - பைக், விவசாய பொருட்களுக்கு தீ வைப்பு
Crime
புதுக்கோட்டை அருகே நள்ளிரவில் பைக், விவசாய பொருட்களுக்கு தீ வைத்து மர்மநபர்கள் அட்டகாசம் செய்துள்ளனர்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், குமாரகிரி ஊராட்சி, திருமலையாபுரம் ஊரை சேர்ந்தவர் தங்கத்துரை. இவருக்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் இருக்கிறது. நேற்று நள்ளிரவில் அந்த தோட்டத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புல்லட் வகை பைக், அங்கிருந்த உரமூடைகள் மற்றும் தண்ணீர் பில்டர் உள்ளிட்டவற்றை தீ வைத்து எரித்துள்ளனர். இன்று காலையில் அங்கு சென்ற தங்கத்துரை அதிர்ச்சியடைந்தார். இது குறித்து புதுக்கோட்டை போலீசில் தங்கத்துரை புகார் செய்திருக்கிறார். போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
nadunilai.com