நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்!

nazareth

நாசரேத் மர்காஷிஸ் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம்!

நாசரேத்,ஜன.10:நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில்  உடையார் குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் சிறப்பு மருத்துவ முகாம்  நடந்தது. தலைமை ஆசிரியர் கென்னடி வேதராஜ் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். முகாமில் பள்ளியில் பயிலும்  பத்தாவது வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களுக்கும் தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது. கிராம சுகாதார செவிலியர்கள் சுதா, சுப்புலட்சுமி, தங்க புஷ்பம், இடைநிலை சுகாதார செவிலியர் ரேவதி ஆகியோர் மாணவர்களை பரிசோதனை செய்து தட்டம்மை தடுப்பூசியை போட்டனர்.  மொத்தம் 580 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.  

இதில் உடற்கல்வி இயக்குனர்  பெலின்பாஸ்கர், உடற்கல்வி ஆசிரியர் தனபால், சுஜித் செல்வசுந்தர் மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.ஆசிரியர் அலெக்சன் கிறிஸ்டோபர் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பள்ளி  தாளாளர் சுதாகர், தலைமை ஆசிரியர் கென்னடி  மற்றும் ஆசிரியர் கள்,அலுவலர்கள் செய்திருந்தனர்.