தூத்துக்குடி - திருப்பூர் வழித்தடத்தில் புதிய பேருந்து - அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
Tnstc news

தூத்துக்குடி - திருப்பூர் வழித்தடத்தில் இயக்கப்பட்ட பழைய பேருந்தை மாற்றிவிட்டு, அந்த வழித்தடத்தில் புதிய பேருந்து சேவையை அமைச்சர் கீதாஜீவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்துகளையும், வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் பழைய பேருந்துகளை மாற்றிவிட்டு அதில் புதிய பேருந்துகளையும் இயக்கி வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி - திருப்பூர் வழித்தடத்தில் (தடம் எண் : 618 ஏ) ஏற்கனவே இயக்கப்பட்ட பழைய பேருந்தை மாற்றிவிட்டு அதில் புதிய பேருந்தை இயக்கும் நிகழ்ச்சி இன்று(8.2.2025)தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் வைத்து நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அரசு போக்குவரத்து கழக மண்டல பொதுமேலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார். கோட்ட மேலாளர் ரமேஷ், கிளை மேலாளர்கள் ரமேஷ்பாபு, கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு புதிய பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர் கூறுகையில், பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி இந்த பேருந்தில் கேமிரா பொறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று அலாரம் அடிப்பதற்கென்று இருக்கைகளுக்கு அருகே தனி சுவிட்ச் பொறுத்தப்பட்டுள்ளது. பயணிகளின் அவசர தேவைக்கு பயன்படுத்திக் கொண்டு நல்லமுறையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம் என்றார்.
விழாவில் போக்குவரத்து கழக உதவி பொறியாளர் சுரேஷ்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், துணை செயலாளர் கீதாமுருகேசன், திமுக தொமுக நிர்வாகிகள் கருப்பசாமி, சந்திரசேகர், உலகநாதன், நாகராஜ், லிங்கசாமி, முருகன், படையப்பா, டேவிட்ராஜ், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி மற்றும் மணி, அல்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி புறநகர் டெப்போவில் இருந்து இயக்கப்படும் இந்த பேருந்து தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் பிற்பகல் 2.15 மணிக்கு புறப்பட்டு மதுரை, ஆரப்பாளையம், ஒட்டன்சத்திரம், தாராபுரம் வழியாக இரவு 11.00 மணிக்கு திருப்பூர் செல்கிறது. திருப்பூரில் இருந்து அதிகாலை 1.30 மணிக்கு கிளம்பி மீண்டும் இதே வழித்தடத்தில் தூத்துக்குடிக்கு வருகிறது.