இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் நடத்தும்,பெண்களுக்கான 2ம்ஆண்டு இலவச கபாடி பயிற்சி முகாம்! மே 9 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடக்கிறது

Nalumavadi

இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் நடத்தும்,பெண்களுக்கான  2ம்ஆண்டு இலவச கபாடி பயிற்சி முகாம்!  மே 9 ம் தேதி முதல் 18 ம் தேதி வரை நடக்கிறது

நாசரேத்,மே.2:நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் நடத்தும்,பெண்களுக்கான  2 ஆம் ஆண்டு இலவச கபாடி பயிற்சி முகாம் வருகிற மே 9 ஆம் தேதி முதல் 18 ஆம்தேதி வரை நடைபெறு கிறது.

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் அருகில் உள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார், ஏலீம் விளையாட்டு மைதானத்தில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் புது வாழ்வு சங்கம் நடத்தும், பெண்களுக்கான  2 ஆம் ஆண்டு இலவச கபாடி பயிற்சி முகாம் வருகிற மே 9 ஆம் தேதி முதல் 18 ஆம்தேதி வரை நடைபெறு கிறது. 14, 17, 19, 21 வயதிற்குட்பட்ட வர்கள் தகுதித் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்கள். தகுதித் தேர்வு மே 8 ஆம் தேதி மதியம் 2 மணியளவில் நடைபெறும். தகுதித் தேர்வு நடைபெறும் அன்று வீராங்கனைகள் ஆதார் கார்டு அல்லது பள்ளி அடையாள அட்டையை கண்டிப்பாகக் கொண்டு வரவேண்டும். 10 நாள் பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படுகிறது.

சிறப்பான தங்குமிடம், உணவு, பயிற்சி வகுப்புகள், தமிழ்நாட்டின் தலை சிறந்த பயிற்சியாளர்கள் மூலமாக பயிற்சி,பயிற்சியின் முடிவில் வீராங்கனைகளுக்கு சான்றிதழ் மற்றும் சீருடைகள் வழங்கப்படுகிறது.விளையாட்டிற்கு தகுதியான உடைகள் மேட் ஷு மற்றும் ரன்னிங் ஷு கொண்டு வரவும்.பயிற்சியின்போது வெளியே செல்ல அனுமதிஇல்லை. தகுதித் தேர்வில் தேர்வான வர்கள் மட்டுமே பயிற்சியில் அனுமதிக்கப் படுவார்கள். தட்டு, டம்ளர் மற்றும் பெட்ஷீட் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.இதற்கானஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் 

ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி.லாசரஸ் தலைமையில் ஒருங்கி ணைப்பாளரும், அர்ஜுனா விருது பெற்ற வீரருமான மணத்தி பி.க ணேசன், நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய பொதுமேலாளர் செல்வக்குமார்,விளையாட்டுத் துறை மணத்தி எட்வின் ஆகியோர் செய்து வருகின்றனர். மேலும் விவரங்கள் அறிய 9600792709, 99440 27306 என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.