பழைய வழித்தடத்தில் புதிய பேருந்துகள் - தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
Tnstc News
தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏற்கனவே உள்ள வழித்தடங்களில் இயக்கப்படும் பழைய பேருந்துகளை கழித்துவிட்டு அந்த வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்செந்தூரில் வைத்து நேற்று அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன், தாண்டவன்காடு, நாசரேத், செபத்தையாபுரம், நெல்லை சந்திப்பு ஆழ்வார்கற்குளம், சாத்தான்குளம் பகுதிகளில் இயக்குவதற்காக 5 புதிய பேருந்துகளை தொடங்கி வைத்தார்.
அதேபோல் இன்று தூத்துக்குடியில் வைத்து இன்று அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடியில் இருந்து பெருங்குளம்(52பி, சுப்பிரமணியபுரம்(52ஏ), கீழவைப்பார்(53சி), கோவில்பட்டி பகுதியை சேர்ந்த அகிலாண்டபுரம்(86ஏ), கீழைஈரால்(82ஏ),வெள்ளப்பனேரி(81பி), வேடப்பட்டி(83பி) ஆகிய பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அப்போது அரசு போக்குவரத்து கழக கோட்ட பொதுமேலாளர் ராமகிருஷ்ணன், கோட்ட மேலாளர் சண்முகம், தூத்துக்குடி கிளை மேலாளர் ரமேஷ்பாபு, கோவில்பட்டி கிளை மேலாளர் ஜேசன் ஜேக்கப், தொமுக தொழிற்சங்கத்தின் மண்டல பொதுச்செயலாளர் தர்மன், அரசு போக்குவரத்து கழக செயலாளர் லிங்குசாமி மற்றும் திமுகவினர் உடனிருந்தனர். பேருந்துகளை கொடிசைத்து துவக்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன், அனைவருக்கும் லட்டு வழங்கினார்.
மேலும் ஓட்டப்பிடாரம் பகுதியை சேர்ந்த இரண்டு பேருந்துகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளது. அதனை ஓட்டப்பிடாரம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகையா கொடியசைத்து துவக்கி வைப்பார் என்று தெரிகிறது.
nadunilai.com