சேர்வைகாரன்மடம் பகுதிக்கு கூடுதல் மின்தடப்பாதை அமைக்கும் பணி - விரைந்து முடிக்க பஞ்.துணைத்தலைவர் கோரிக்கை

Thoothukidi collector

சேர்வைகாரன்மடம் பகுதிக்கு கூடுதல் மின்தடப்பாதை அமைக்கும் பணி - விரைந்து முடிக்க பஞ்.துணைத்தலைவர் கோரிக்கை

சேர்வைக்காரன்மடம் பகுதிக்கு சாயர்புரம் - புதுக்கோட்டை தேரி வழியாக மின்தடப்பாதை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கைவிடுத்துள்ளார்.  

இது குறித்து அவர் கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது : தூத்துக்குடி மாவட்டம், சேர்வைக்காரன்மடம் பகுதிக்கு புதுக்கோட்டை,கூட்டாம்புளி வழியாக மின் தடப்பாதை உள்ளது. கூடுதலாக சாயர்புரம் -புதுக்கோட்டை தேரி வழியாகவும் கூடுதல் வழி மின்தடப்பாதை அமைக்க ஊர் பொதுமக்கள் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு சாயர்புரம் -புதுக்கோட்டை தேரி  மின்தடப்பாதை அமைக்க ஆய்வு செய்யப்பட்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெண்டர் விடப்பட்டது. மின் வாரிய விதிப்படி 90நாட்களுக்குள் பணியை முடிக்கவேண்டும் என டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்  4 மாதங்கள் கடந்தும் இதுவரை பணிகள் ஆரம்பிக்க படவில்லை. எனவே புதுக்கோட்டை - சாயர்புரம் தேரி வழியாக சேர்வைகாரன்மடம் பகுதிக்கு புதிய மின் தடம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் சாயர்புரம் மின்வாரிய அலுவலகத்திற்குட்பட்ட செந்தியம்பலம் பகுதியில் ரைட்டர் விளை தெருவில் ஆபத்தாக தரையிலிருந்து 7அடி உயரத்தில்  மின் வயர்கள் செல்கிறது. இந்த பகுதியில் கூடுதல் மின்கம்பம் நட்டு, மின் வயர்களை உயரமாக செல்லுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த பணியும் நிறைவேற்றப்படவில்லை. சுமார் 5 இடங்களில் மின்கம்பங்கள் நடபட்டு 3 மாதமாகியும் செந்தியம்பலத்திற்கு இணைப்பு கொடுக்கப்படவில்லை. எனவே இந்த பணிகள் அனைத்தையும் விரைந்து முடிக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.