அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி! நாலுமாவடியில் 2, 3 தேதிகளில் நடைபெறுகிறது
nazareth
நாசரேத், மார்ச்.01:தூத்துக் குடி மாவட்ட அமெச்சூர் கபடி கழகத்தின் மாவட்ட அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கபடி சாம்பியன்ஷிப் போட்டி நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஏலிம் மைதானத்தில் மார்ச் 2, 3 ஆகிய தேதிகளில் நடைபெ றுகிறது.
துத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபாடிக் கழகம் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனத்தின் விளையாட்டு திடலில் மார்ச் 2, 3,ஆகிய தேதிகளில் தூத்துக்குடி மாவட்ட சீனியர் ஆண்கள், பெண்கள் 38வது மாவட்ட சேம்பியன் ஷிப்க் கான கபாடி போட்டி நடை பெற உள்ளது. போட்டிக்கு சிறப்பு விருந்தினர்களாக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, தூத்துக்குடி மாவட்ட கபாடிக்கழக தலைவர் தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். இராதாகிருஷ்ணன், தூத்துக்குடிமாவட்ட கபாடி கழக சேர்மன் சகோ. மோகன் சி.லாசரஸ் ஆகி யோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். போட் டிகளில் கலந்து கொள்ளும் ஆண்களுக்கான கபடி போட்டி மார்ச் 2 ஆம் தேதி சனிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் ஆண்கள் 85 கிலோ எடை அளவு கொண்டவர்களாக இருக்க வேண்டும். பெண்கள் கபடி போட்டி மார்ச் 3 ஆம் தேதி ஞாயிற்று கிழமை காலை 7 மணிக்கு நடைபெறுகிறது. போட்டிக ளில் கலந்து கொள்ளும் பெண்கள் எடை 75 கிலோ இருக்க வேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு முதலா வது பரிசாக 50,000 ரூபாய், 2வது பரிசாக 30,000 ரூபாய் மூன்றாம் மற்றும் நான்காம் பரிசாக 20,000 ரூபாய் மற் றும் கோப்பைகள் வழங்கப் படுகிறது.துறைசார்ந்தவீரர் கள்,வீராங்கனைகள் விளை யாட அனுமதி இல்லை.
இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமைச்சூர் கபடிக் கழக தலைவர் அனிதா ஆர் ராதா கிருஷ்ணன் தலைமையில் சேர்மன் சகோ. மோகன் சி. லாசரஸ் முன்னிலையில் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், பொருளாளர் ஜிம் ரீவ்ஸ், ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருதுபெற்ற கப டிவீரர் மணத்தி கணேசன், தூத்துக்குடி மாவட்ட அமெச் சூர் கபடி கழக நடுவர் குழு நடுவர் குழு சேர்மன் கண் ணன்,கன்வீனர் மைக்கேல் ஆகியோர் செய்து வருகின்றனர்.