மாநில அளவில் கால்பந்து போட்டி : திருச்சி காஜாமியான் பள்ளி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

Nazareth news

மாநில அளவில் கால்பந்து போட்டி : திருச்சி காஜாமியான் பள்ளி அணி இறுதிப் போட்டிக்கு தகுதி!

நாசரேத்,செப்.7: நாசரேத்தில்  பள்ளி களுக்கிடையே நடைபெற்று வரும் மாநில கால்பந்து முதல் அரை இறுதிப் போட்டியில் திருச்சி காஜாமியான் மேல் நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி விளை யாட்டு மைதானத்தில் பள்ளிகளுக்கி டையேயான மாநில கால்பந்து போட்டி கடந்த 04 ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று காலை  நடைபெற்ற முதல் போட்டியில் மூக்குப்பீறி தூய மாற்கு  மேல்நிலைப் பள்ளி அணியும், ஆறுமுகனேரி பியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல்  அணியும், மோதின.இதில் 1:0 என்ற கோல் கணக் கில்  ஆறுமுகனேரி பியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல்  அணி வெற்றி பெற்றது.

2-வது நடைபெற்ற போட்டி அரை இறுதிப் போட்டியாக நடந்தது.முதல் அரை இறுதிப் போட்டியில் திருச்சி காஜாமியான் மேல்நிலைப்பள்ளி அணியும்,ஊட்டி திரு இருதய மேல் நிலைப்பள்ளி அணியும் மோதின. இதில் 5:0 என்ற கோல் கணக்கில் திருச்சி காஜாமியான் மேல்நிலைப் பள்ளி  அணி வெற்றி பெற்று செப் 09 ஆம் தேதி மாலையில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

மாலையில் நடைபெற்ற  முதல் போட்டியில்  மேனர் மேல்நிலைப்பள்ளி  சிவகங்கை அணியும், தூத்துக்குடி பி.எம்.சி. பள்ளி அணியும் மோதின. இதில் 1:0 என்ற கோல் கணக்கில்  தூத்துக்குடி பி.எம்.சி.பள்ளி அணி வெற்றி பெற்றது.

2- வது போட்டியில் ஆறுமுகனேரி பியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணியும், காயல்பட்டணம் சென்ட்ரல்மேல்நிலைப் பள்ளி அணியும் மோதின.ஆட்டம் முடியும் வரை இரண்டு அணியினரும் கோல் போடாததால் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க டைப்ரேக்கர் முறை பின்பற்றப்பட்டது. இதில் 4:3 என்ற கோல் கணக்கில்  ஆறுமுகனேரி பியர்ல்ஸ் பப்ளிக் ஸ்கூல் அணி வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியின் சிறப்பு அழைப்பாளர்களாக நாசரேத் மர்கா ஷிஸ் மேல்நிலைப்பள்ளி தலைமையா சிரியர் கென்னடி வேதராஜ், தொழிலதி பர் ராஜா  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.