தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல 4ம் கட்ட தேர்தல் - எஸ்.டி.கே.ராஜன் அணி சாதனை வெற்றி
CSI Diocese
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல 4ம் கட்ட தேர்தலில் 6 கவுன்சில்களிலும் எஸ்.டி.கே.ராஜன் அணியே வெற்றி பெற்றது.
தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலத்துக்கான தேர்தல் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜோதிமணி தலைமையில் நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி திருமண்டலத்தில் உள்ள 6 சபை மன்றங்களிலும் நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதில் செயற்குழு உறுப்பினர், ஆசிரியர் பிரதிநிதிகள் சார்பில் பெருமன்ற உறுப்பினர்கள் தேந்தெடுத்தல், சபைமன்ற செயலாளர் மற்றும் ஆரம்ப கல்வி நிலவர குழு, குருத்துவ நிலவர குழு, சமூக நலத்துறை குழு என பல்வேறு உப கமிட்டிகளுக்கான தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணியும், டி.எஸ்.எப்.கிப்ட்சன் தலைமையிலான அணியும் நேரடியாக போட்டியிட்டது. கடந்த முறை டி.எஸ்.எப் அணியில் இருந்த மோகன் ராஜ் அருமைநாயகம், ஜான்சன் டேவிட் உள்ளிட்டோர் இந்த முறை எஸ்.டி.கே.ராஜன் தலைமையிலான அணியில் இணைந்து பணியாற்றினர். இதனையடுத்து பரபரப்பாக நடைபெற்ற கவுன்சில் தேர்தலில் எஸ்.டி.கே.ராஜன் அணியினர் 6 சபை மன்றத்திலும் உள்ள 24 செயற்குழு உறுப்பினர்கள் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் கைப்பற்றி சாதனை வெற்றி பெற்றனர்.
அதன்படி நாசரேத் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் சபை மன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக மாமல்லன், ஸ்டீபன் சாலமோன், பியூலா ரத்தினம், மோசஸ் ராஜகுமார், சபைமன்ற செயலாளராக கோயில்ராஜ் தேர்வு செய்யப்பட்டனர். கோவில்பட்டி இராக்லாண்ட் சபை மன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக ஜான்சிங், தனராஜ், அபிநயா, சுபா, சபை மன்ற செயலாளராக கிருபைராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தூத்துக்குடி பேராயர் இராபர்ட் கால்டுவெல் சபை மன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக சி.த.செல்லப்பாண்டியன், ஜெபச்சந்திரன், செலினா, ஜானியேல் சாலமோன் மணிராஜ், சபை மன்ற செயலாளராக ராபர்ட்ரவிசிங்பெஞ்சமின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
சாயர்புரம் டாக்டர் ஜி.யு. போப் சபைமன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக அருள் மேயர் மால்சொர்ணபாண்டியன், சுகந்தி, சேகர், சபை மன்ற செயலாளராக செல்வின் ஜோஸ்வா ஆகியோரும், சாத்தான்குளம் தாவீது சுந்தரானந்தனார் சபை மன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக குணசீலன் தங்கதுரை, சுபாஸ், பெர்சி சுந்தர், ஸ்டீபன், சபை மன்ற செயலாளராக இன்பராஜ் ஆகியோரும், மெஞ்ஞானபுரம் ஜாண் தாமஸ் சபை மன்றத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்களாக எட்வர்ட், அருள்ராஜா, கரோலின், எமர்சன், சபை மன்ற செயலாளராக கிறிஸ்டியன் தங்கதுரை ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர். இது தவிர சேகர ஊழியர் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகளாக 30 பேரும், திருமண்டல ஊழியர் மற்றும் நிறுவனங்ளின் பிரதிநிதிகளாக 18 பேரும் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 2 பிரதிநிதிகள் தவிர மற்ற அனைத்து பதவிகளையும் எஸ்.டி.கே.அணியினர் கைப்பற்றினர். வெற்றி பெற்ற அனைவரும் முன்னாள் லே செயலாளர் எஸ்.டி.கே.ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இறுதியாக வரும் 30, 31 ஆகிய தேதிகளில் நாசரேத்தில் வைத்து திருமண்டல பெருமன்ற கூட்டம் நடைபெறுகிறது. இதில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல லே செயலர், உபதலைவர், குருத்துவ செயலர், திருமண்டல பொருளாளர் உள்ளிட்ட பல்வேறு உப கமிட்டிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது.
nadunilai.com