போதை புழக்கத்திற்கு எதிராக தூத்துக்குடியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

A.D.M.K

போதை புழக்கத்திற்கு எதிராக தூத்துக்குடியில் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற மூன்று ஆண்டுகளில் ஜாபர் சாதிக் எனும் திமுக நிர்வாகி போதைப் பொருள் கடத்தல் கும்பல் தலைவனாக செயல்பட்டு 3000 கோடிக்கும் அதிகமாக போதை பொருட்களை கடத்தி பிடிபட்டுள்ளான்.  திமுகவின் தயவில் இந்த கடத்தல்கள் நடந்திருக்கலாம் என்றும் போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்திட அதிமுக வின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மார்க்கெட் சிக்னல் அண்ணா சிலை முன்பிருந்து தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், பழைய பேருந்து நிலையம் முடிவு வரை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற மாபெரும் மனித சங்கிலி போராட்டம் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சண்முநாதன் போதை கடத்தலை கட்டுப்படுத்தாத திமுக ஸ்டாலின் அரசை பதிவி விலக கூறியும் தமிழக மக்களை வஞ்சிக்கும் வகையில் சட்டத்தை ஏற்றும் மத்திய பாஜக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசினார்.

இந்நிகழ்வில் அதிமுக அமைப்புச் செயலாளர் என்.சின்னத்துரை, மாநில அமைப்பு சாரா ஓட்டுநரணி இணைச் செயலாளர் பெருமாள்சாமி, அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் இரா.ஹென்றி, மாநில வழக்கறிஞர் அணி துணைச் செயலாளரார் வக்கீல் மைக்கல் ஸ்டனிஸ் பிரபு,  ஸ்ரீவைகுண்டம் யூனியன் சேர்மன் வசந்தாமணி, மாநில மீனவரணி துணைத் தலைவர் ஏரோமியஸ், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் எம்.பெருமாள், இலக்கிய அணி நடராஜன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ஜூலியட், மாணவரணி பில்லா விக்னேஷ், சிறுமாண்மை பிரிவு கே.ஜே. பிரபாகர், இளைஞர் பாசறை தனராஜ், தகவல் தொழில்நுட்பப்பிரிவு அருண்ஜெபக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், இணைச் செயலாளர் செரினா, பகுதி கழக செயலாளர்கள் முருகன், முன்னாள் துணை மேயர் சேவியர், ஜெய்கணேஷ், நட்டர் முத்து, தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் ஜவஹர், தெற்கு பகுதி அம்மா பேரவை செயலாளர் சுடலைமணி, பகுதி துணைச் செயலாளர் சென்பகசெல்வன், மண்டல ஐடி விங் இணைச் செயலாளர் வக்கீல் மந்திரமூர்த்தி, மாவட்ட அண்ணா ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் நிலா சந்திரன், 

முன்னாள் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் சுகந்தன் ஆதித்தன், ஆண்ட்ருமணி, பிள்ளைவிநாயகம், மாவட்ட வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர்கள் முனியசாமி, சரவணபெருமாள், ரவிந்திரன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் மனுவேல்ராஜ், வலசை வெயிலுமுத்து, கவுன்சிலர் வெற்றிச்செல்வன், அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு மண்டல செயலாளர் கல்விக்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர்கள் சத்யா லட்சுமணன், ஜோதிமணி, ஐடியல் பரமசிவம், கே.டி.சி.ஆறுமுகம், பி.ஜே.சி.சுரேஷ், ரமேஷ்கிருஷ்ணன், வெங்கடேஷ், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி துணைச் செயலாளர் டைகர் சிவா, சொக்கலிங்கம், தூத்துக்குடி மணிகண்டன், தலைமைக் கழக பேச்சாளர் முருகானந்தம், மகளிர் அணி நிர்வாகிகள் மெஜிலா,   சாந்தி, ராதா ஆனந்த், சண்முகதாய், இராஜேஸ்வரி, இந்திரா, சந்திரா செல்லப்பபா, அன்னபாக்கியம், பானுமதி, ஸ்மைலா, ஷாலினி, முத்துசெல்வி, சரோஜா, முன்னாள் கவுன்சிலர்கள் தமிழரசி, சந்தனபட்டு, பொன்ராஜ், டேவிட் ஏசவடியான் வட்ட செயலாளர்கள் ஜனார்தனன், கொம்பையா,  சுப்பிரமணிபாண்டியன், ராமசந்திரன், சுயம்பு, சங்கர், மணிகணேஷ், ராஜன், ரகுநாதன், ரங்கன், உதயசூரியன், முத்துக்குமார், மனோகர், அருண்ராஜா, நவ்சாத், ஜெயக்குமார், ரவிந்திரன், அந்தோணிராஜ், ஈஸ்வரன், உலகநாதபெருமாள், செல்வராஜ், கண்ணையா, மாடசாமி, எஸ்.கே.மாரியப்பன், யோவான், ஹார்பர் பாண்டி, அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ஜவஹர், தெர்மல் ஜேசுராஜ், பெண் வழக்கறிஞர்கள் உஷா சுரேஷ், ஜோதிமணி, வக்கீல்கள் செல்வம், ஆனந்த், உதயா, பாலஜெயம், சரவணவேல், சாம்ராஜ், சகாயராஜா, உட்பட பலர் கைகோர்த்து நின்று விடியா திமுக அரசிற்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினர்.